27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

Added : ஆக 20, 2021
Share
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வரும் 27ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடக்கிறது. கூட்டத்தில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், பொறியியல் துறை அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.மேலும், கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களும் பங்கேற்று விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் பொது கோரிக்கைகளை தெரிவித்தும், தனி நபர் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தும் பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X