தமிழ்நாடு

பயனில்லை; வட்டார போக்குவரத்து அலுவலகமாக மாறியும்...போதுமான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுமா?

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லும் சாலை, உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு, வாடகை கட்டடத்தில் இயங்கியது. பல ஆண்டுகளாக தனியார் வாடகைக் கட்டடத்தில் இயங்கி

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லும் சாலை, உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கொண்டு வரப்பட்டு, வாடகை கட்டடத்தில் இயங்கியது. பல ஆண்டுகளாக தனியார் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், கடந்த 2019 ஆகஸ்ட் 20ம் தேதி, 1.69 கோடி ரூபாய் மதிப்பில் கள்ளக்குறிச்சியில் பெருவங்கூர் கிராம எல்லையில், புதிதாக அலுவலக கட்டடத்தை அப்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.புதியதாக துவங்கப்பட்ட இந்த அலுவலகத்திற்குச் செல்ல முறையான சாலை வசதி இல்லை. அலுவலகத்திற்குச் செல்லும் சாலை, வயல்வெளிப் பகுதிகளுக்கு இடையே மண் சாலையாக இருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.அத்துடன் மின் விளக்குகள் இல்லாத இந்த சாலையில் மாலை நேரங்களில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படும் சூழல் உள்ளது. இதனால் ஒன்றரை ஆண்டுகளாக மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு மின்விளக்கு வசதியுடன் கூடிய தார்சாலை அமைக்க வேண்டும் என அப்போதைய எம்.எல்.ஏ., பிரபு, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து மனு வழங்கினார்.இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தரம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்தப்பட்டது.இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை உள்ளிட்ட 4 தாலுகாக்கள் உள்ளன.இந்த அலுவலகத்திற்கு புதிய வட்டார போக்குவரத்து அலுவலர் கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனால் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தின் ஒரு பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகமாக மாற்றப்பட்டு தற்போது இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்திற்கு, பயணிகள் மற்றும் பொருட்களை ஏற்றி செல்லும் 15 ஆயிரத்து 234 வாகனங்கள், சொந்த உபயோகத்தில் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 92 வாகனங்கள் என மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 326 வாகனங்கள் மற்றும் புதிய வாகனங்கள், எப்.சி., பதிவு புதுப்பித்தல் என பல்வேறு காரணங்களுக்காக வாகனங்கள் கொண்டு வரப்படுகின்றன.

ஏராளமான வாகனங்கள் வந்து செல்லும் இந்த அலுவலகத்திற்குச் செல்லும் சாலை வசதி மிகவும் மோசமாக குண்டும், குழியுமான மண் சாலையாகவே இருந்து வருகிறது. அத்துடன் அலுவலகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு ஏற்றாற்போலவே உள்ளது.வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஏற்றதாக மாற்றப்படவில்லை. எனவே கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்குச் செல்லும் சாலையின் தரத்தையும் உயர்த்தி, போதுமான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X