சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாட்டு வண்டி தொழிலாளர்கள் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் 

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.விருத்தாசலம் மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் மணல் குவாரி திறக்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். இந்திய மாதர்

விருத்தாசலம்-மாட்டுவண்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.விருத்தாசலம் மணவாளநல்லுார் மணிமுக்தாற்றில் மணல் குவாரி திறக்க வேண்டும். மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட தலைவர் அறிவழகி, கவுரவத் தலைவர் விஜய பாண்டியன், வட்டச் செயலர் ராவணராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னத்துரை வரவேற்றார். கேசவ பெருமாள், பாலமுருகன், ராமச்சந்திரன், பிரபாகரன், பச்சமுத்து உட்பட பலர் பங்கேற்றனர்.சிதம்பரம்: சிதம்பரம், புவனகிரி வட்டத்தில் பொன்னகோவில், அல்லுார் , ஆதனுார், அழிசிகுடி ஆகிய பகுதிகளில் ஏதேனும் இரு இடத்தில் மணல் குவாரி அமைக்க கோரி சப் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிதம்பரம் வட்டச் செயலாளர் வேல்வேந்தன் தலைமை தாங்கினார். குமார், ராமலிங்கம், செல்வராசன், சத்யராஜ் உட்பட பலர் பேசினர். திட்டக்குடி: தொழுதுார், இடைச்செருவாய், கோழியூர், இறையூர், பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் மாட்டு வண்டி மணல் குவாரி திறக்க வலியுறுத்தி தாலுகா அலுவலகம் முன் ஜீவா மாட்டுவண்டி தொழிலாளர் சங்க வட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X