தமிழ்நாடு

சாதனை! குறுவை பருவத்தில் 9704 ஏக்கரில் நெல் சாகுபடி; 12 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் மகிழ்ச்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுரை : மதுரை மாவட்டத்தில் 12 ஆண்டுகள் கழித்து குறுவை பருவத்தில் 9704 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டில் சம்பா சாகுபடியின் போது அதிக மழையால் அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. உற்பத்தி குறைந்ததால் போதிய இலக்கை எட்ட முடியவில்லை. அடுத்ததாக குறுவை சாகுபடியின் போது மழை இல்லை. தண்ணீர் திறப்பும் தாமதமானது. ஆண்டுதோறும் சராசரியாக
சாதனை! குறுவை பருவத்தில் 9704 ஏக்கரில் நெல் சாகுபடி; 12  ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகள் மகிழ்ச்சி

மதுரை : மதுரை மாவட்டத்தில் 12 ஆண்டுகள் கழித்து குறுவை பருவத்தில் 9704 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.


கடந்தாண்டில் சம்பா சாகுபடியின் போது அதிக மழையால் அறுவடை நேரத்தில் நெற்பயிர்கள் சேதமடைந்தன. உற்பத்தி குறைந்ததால் போதிய இலக்கை எட்ட முடியவில்லை. அடுத்ததாக குறுவை சாகுபடியின் போது மழை இல்லை. தண்ணீர் திறப்பும் தாமதமானது. ஆண்டுதோறும் சராசரியாக 3500 முதல் 4000 எக்டேரில் சாகுபடி நடப்பது வழக்கம். ஆக., 31 ல் தண்ணீர் திறந்ததால் 1400 எக்டேரில் மட்டுமே குறுவை சாகுபடியானது.

இந்தாண்டு மழை கைகொடுத்ததால் பெரியாறு, வைகை அணைகளில் போதிய தண்ணீர் இருப்பில் உள்ளது. சரியான நேரத்தில் ஜூன் 4 குறுவைக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டனர். தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் நிலையில் இதுவரை 9704 எக்டேரில் சாகுபடி நடந்துள்ளது.

அதே போல சம்பா சாகுபடிக்காக ஆக., 11 தண்ணீர் திறக்கப்பட்டதால் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் எக்டேரில் நெல் சாகுபடி நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் இணை இயக்குனர் விவேகானந்தன் கூறியதாவது: விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சிமருந்து இடுபொருட்கள் கூட்டுறவு மற்றும் தனியார் கடைகளில் போதிய இருப்பு உள்ளன. உணவு தானிய உற்பத்தி இயக்கத்தின் கீழ் மதுரைக்கு 95ஆயிரத்து 900 எக்டேரில் 3.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்திக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

32 ஆயிரத்து 400 எக்டேரில் சிறுதானியம், 11 ஆயிரம் எக்டேரில் பயறு வகை பயிர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை, சம்பா, கோடை சாகுபடியில் இந்த இலக்கு அடையப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X