நுண்ணீர் திட்ட மானியம் ரூ 2.42 கோடி ஒதுக்கீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நுண்ணீர் திட்ட மானியம் ரூ 2.42 கோடி ஒதுக்கீடு

Added : ஆக 20, 2021
Share
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் பழங்கள், காய்கறி பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க மத்திய அரசு ரூ.2 கோடியே 42 லட்சம் ஒதுக்கியுள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான சான்றுகளுடன் தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தண்ணீர் வசதி இல்லாத

வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் பழங்கள், காய்கறி பயிர்களுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க மத்திய அரசு ரூ.2 கோடியே 42 லட்சம் ஒதுக்கியுள்ளது.

சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தேவையான சான்றுகளுடன் தோட்டக்கலை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். தண்ணீர் வசதி இல்லாத விவசாயிகள் நுண்ணீர் பாசன திட்டத்துடன் இணைந்து துணைநிலை நீர் பாசன மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்யலாம்.

இதில் அதிகபட்சமாக ஆழ்துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம், டீசல் அல்லது மின் மோட்டார் வாங்க ரூ.15 ஆயிரம், தரை நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க ரூ.40 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும். சிறு, குறு விவசாயி சான்று வழங்குதல் மற்றும் திட்ட விழிப்புணர்வு முகாம் சோழவந்தானில் ஆக., 24, தென்கரையில் ஆக., 26ல் நடக்க உள்ளதாக தோட்டக்கலை உதவி இயக்குனர் சரவணபிரியா தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X