கடலுார்-பிரதம மந்திரி சாலைகள் திட்டத்தில் இதுவரை 116 கி.மீ., நீள சாலை பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என கலெக்டர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் பிரதம மந்திரி சாலைகள் திட்டம் தொடர்பாக மாவட்ட ஊரக சாலைகள் கருத்தரங்கை ரமேஷ் எம்.பி., முன்னிலையில் கலெக்டர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்தார். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிந்ததை சிறப்பிக்க ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் என்ற விழாவை ஜூன் 2021 முதல் ஆகஸ்ட் 2022 வரை கொண்டாடப் படுகிறது. இதன் ஒரு நிகழ்வாக ஊரக சாலைகள் கருத்தரங்கம் நடக்கிறது. மேலும், 2000 ஆண்டு முதல் கிராம சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 2015- - 16ம் ஆண்டு முதல் ஒட்டு மொத்த தொகையில் 60 சதவீதம் மத்திய அரசின் பங்கு தொகை மற்றும் 40 சதவீதம் மாநில அரசின் பங்குத் தொகையில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தின்கீழ் 73 சாலைகள் 232 கி.மீ., நீளத்திற்கு தேர்வு செய்து இது வரை 44 சாலைகள் 116 கி.மீ.,நீளத்திற்கு பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள சாலை பணிகள் நடக்கின்றன, என்றார். கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்ஜித்சிங், பவன்குமார் ஜி.கிரியப்பனவர், செயற்பொறியாளர் பிரபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE