போலீஸ் செய்திகள் ... | Dinamalar

போலீஸ் செய்திகள் ...

Added : ஆக 20, 2021
Share
தம்பதிக்கு மயக்க மருந்து ரூ.ஒரு லட்சம் திருட்டுஅலங்காநல்லுார்: வைகாசிபட்டி ராஜேந்திரன் 52, மனைவி கலாராணி 46. இவர்களிடம் கால் வலிக்கு என மயக்க மருந்து கொடுத்த ஆந்திரா வெங்கடேசன் வீட்டிலிருந்த ரூ.ஒரு லட்சத்து 8 ஆயிரம், 4 கிராம் தங்க தாயத்தை திருடி சென்றார். அவரை போலீசார் தேடுகின்றனர்.மின்வாரிய ஊழியர் தற்கொலைசோழவந்தான்: பாலகிருஷ்ணாபுரம் பாண்டியராஜன் 39, மட்டப்பாறை

தம்பதிக்கு மயக்க மருந்து ரூ.ஒரு லட்சம் திருட்டு

அலங்காநல்லுார்: வைகாசிபட்டி ராஜேந்திரன் 52, மனைவி கலாராணி 46. இவர்களிடம் கால் வலிக்கு என மயக்க மருந்து கொடுத்த ஆந்திரா வெங்கடேசன் வீட்டிலிருந்த ரூ.ஒரு லட்சத்து 8 ஆயிரம், 4 கிராம் தங்க தாயத்தை திருடி சென்றார். அவரை போலீசார் தேடுகின்றனர்.

மின்வாரிய ஊழியர் தற்கொலை

சோழவந்தான்: பாலகிருஷ்ணாபுரம் பாண்டியராஜன் 39, மட்டப்பாறை மின்வாரியத்தில் லயன் மேனாக வேலை செய்தார். மது பழக்கத்திற்கு அடிமையானவர் வயிற்று வலியால் அவதியுற்றார். ஆக.,11 விஷம் குடித்தவர் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

அலங்காநல்லுார்: எஸ்.ஐ., பழனி மற்றும்போலீசார் கல்லணை காந்திகிராமம் பகுதியில் ரோந்து சென்றனர். ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்ற முத்துபிச்சையை 47, கைதுசெய்து 42 லாட்டரிகள், அலைபேசி, ரூ.9 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

குடும்ப தகராறு; பெண் தற்கொலை

அலங்காநல்லுார்: கல்லணை ராஜ்கமல்27, அதே பகுதி ராஜேஸ்வரியை 22, காதலித்து 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார். மூன்று மற்றும் ஒரு வயதில் குழந்தைகள் உள்ளன. ராஜ்கமல் மது அருந்தி விட்டு கொலுசை அடகு வைத்தது தொடர்பாக ஆக.,15ல் கணவன்மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ராஜேஸ்வரி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மதுரை அரசு மருத்துவமனையில் ஆக.,18 இறந்தார்.

மதுபாட்டில்களுடன் கைது

சோழவந்தான்: எஸ்.ஐ., கோதண்டராமன் மற்றும் போலீசார் கரட்டுப்பட்டியில் ரோந்து சென்றனர். சட்டவிரோதமாகமது விற்ற கல்லூரிபெருமாள்பட்டி வினோத்தை 30, கைது செய்து 102 மதுபாட்டில்கள், ரூ.10730 ஐ பறிமுதல் செய்தனர்.

மது பாட்டில்கள் அழிப்பு

திருமங்கலம்: திருமங்கலம், கள்ளிக்குடி தாலுகாவில் பல்வேறு இடங்களில் போலீசாரால் 900 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைநடக்கும் நிலையில், மதுபாட்டில்கள் மதுவிலக்கு ஸ்டேஷனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. நீதிமன்றம் அனுமதி பெற்று டி.எஸ்.பி., இளவரசன்,இன்ஸ்பெக்டர் குணசுந்தரி, எஸ்.ஐ., காளிராஜ் முன்னிலையில் போலீசார் மதுவை கீழே ஊற்றி அழித்தனர்.

3 கிலோ புகையிலை பறிமுதல்

ஆஸ்டின்பட்டி: எஸ்.எஸ்.ஐ., முருகேசன் மற்றும் போலீசார் நிலையூரில் வாகன சோதனையில் உசிலம்பட்டி தாலுகா அரசமரத்துபட்டி வீராச்சாமியின் 30, டூவீலரை சோதனையிட்டனர். தடை செய்யப்பட்ட 3.100 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

ஆதரவற்றோருக்கு உதவி

மதுரை: பழங்காநத்தம் பாலத்தின்கீழ் 75 வயது மதிக்கத்தக்க ஒருவர், உடல்நலம் பாதிக்கப்பட்டு பராமரிப்பின்றி இருந்தார். இதுகுறித்து மதுரை தெற்கு போக்குவரத்து ஏட்டு மகேஸ்வரன், விளாச்சேரி நேத்ராவதி வலி நிவாரண மைய டாக்டர் பாலகுருசாமிக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக மையத்தைச் சேர்ந்தவர் முதியவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அவரது பெயர், ஊர் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

லாரி மோதி இளைஞர் பலி

மதுரை: கீழவைத்தியநாதபுரம் செந்துாரபாண்டி 24. நேற்று மதியம் நண்பர்கள்இருவருடன் டூவீலரில் ஆனையூர் பகுதியில் சென்றபோது லாரி மோதி இறந்தார். மற்ற இருவரும் காயமுற்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.2.50 லட்சம் மோசடி

மதுரை: தென்காசி கடையநல்லுார் பட்டம்முத்து 22. இவருக்கு தபால் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.2.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக அன்பரசு, செல்வகுமார் ஆகியோர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நகை, பணம் கொள்ளை

திருநகர்: தனக்கன்குளம் சந்தோஷ்நகர்கிறிஸ்டோபர் சகாயராஜ் சில நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் ஊமச்சிகுளத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்த போது வீட்டின்கதவு உடைக்கப்பட்டு ரூ.1,35,000 மதிப்புள்ள நகைகள், லேப்டாப்பை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

சாராய ஊறல் அழிப்பு

பேரையூர்: அணைகரைபட்டி முனியாண்டி 40. இவர் தோட்டத்தில் சாராய ஊறல் போட்டு இருந்தார். அங்கிருந்த 100 லிட்டர் சாராய பேரல்களை அழித்த போலீசார் தப்பிய முனியாண்டியை தேடுகின்றனர்.

மின் ஒயர்கள் திருட்டு

வாடிப்பட்டி: குலசேகரன்கோட்டை தோட்டப்பகுதியில் ரூ.14,000 மதிப்புஉள்ள 580 மீட்டர் மின் ஒயர்கள், உபகரணங்கள் திருடு போயின. உதவி மின் பொறியாளர் கீர்த்திகா புகாரின்படி போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணிடம் செயின் பறிப்பு

அவனியாபுரம்: பெருங்குடி ராஜேஸ்வரி 54, கணவர் பழனிவேல் ராஜனுடன் திருப்பரங்குன்றம் பாம்பன் நகர் அருகே டூவீலரில் சென்றார். பின்னால் டூவீலரில்சென்ற இருவர் ராஜேஸ்வரியை கீழே தள்ளி 3 பவுன் செயினை பறித்து சென்றனர். அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கண்மாயில் மணல் திருட்டு

ஆஸ்டின்பட்டி: எஸ்.ஐ., பிச்சைபாண்டி மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது பெருங்குடி ரோட்டில் நிலையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்ற லாரியை சோதனையிட்டனர். நிலையூர்கண்மாயில் அனுமதியின்றி மணல் திருடி வந்தது தெரிந்தது. கைத்தறிநகர் லாரி டிரைவர் சிவக்குமாரை 30, கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் கார்த்திக்ராஜாவை தேடுகின்றனர்.

வாலிபர் தற்கொலை

திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை விஜயலட்சுமி மகன் ராஜ்குமார் 29, வேலை கிடைக்காததால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X