பொது செய்தி

தமிழ்நாடு

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை  

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடந்தது. சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவு மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீதம் இடம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சேரும் மாணவ,

கடலுார்-கடலுார் மாவட்டத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை குலுக்கல் முறையில் நடந்தது. சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளை தவிர்த்து, தனியார் பள்ளிகளில் நலிவுற்ற பிரிவு மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 25 சதவீதம் இடம் அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவில் சேரும் மாணவ, மாணவிகளுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும். கடலுார் மாவட்டத்தில் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளிகள் 132, மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகள் 230 உட்பட 362 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 5,824 இடங்களுக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. சேர்க்கைக்காக 8,980 விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் பெறப்பட்டன. இதில், 7,763 விண்ணப்பங்கள் தகுதியானவை. தகுதியற்ற 443 விண்ணப்பங்கள், உரிய சான்று இணைக்கப்படாத 754 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. நேற்று அனைத்து பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டது. ஒதுக்கீட்டு அளவை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில், குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X