பொது செய்தி

தமிழ்நாடு

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
விருத்தாசலம்-கடலுார் மாவட்டத்திற்கான பருவநிலை மாற்றத்திற்கேற்ற நீடித்த நிலையான ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நபார்டு மண்டல பொது மேலாளர் வெங்கட்டகிருஷ்ணா துவக்கி வைத்தார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் கடலுார் மாவட்டத்திற்கான பருவநிலை

விருத்தாசலம்-கடலுார் மாவட்டத்திற்கான பருவநிலை மாற்றத்திற்கேற்ற நீடித்த நிலையான ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நபார்டு மண்டல பொது மேலாளர் வெங்கட்டகிருஷ்ணா துவக்கி வைத்தார்.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மண்டல ஆராய்ச்சி நிலையம் சார்பில் கடலுார் மாவட்டத்திற்கான பருவநிலை மாற்றத்திற்கேற்ற நீடித்த நிலையான ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தை நபார்டு வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்துகிறது. இதன் துவக்க விழா, விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று நடந்தது. ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர்அம்பேத்கர் தலைமை தாங்கினார். மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் சுப்ரமணியன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜய் நிகார் முன்னிலை வகித்தனர். அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் வரவேற்றார்.நபார்டு வங்கி மண்டல முதன்மை பொது மேலாளர் சென்னை வெங்கட்டகிருஷ்ணா துவக்கி வைத்து பேசுகையில் , மாவட்டத்தில் 15 விவசாயிகளை தேர்வு செய்து ரூ. 22 லட்சம் மதிப்பில் பயிற்சியளிக்கப்டும். விவசாயிகள் அனைவரும் இந்த திட்டம் மூலம் பயனடைய வேண்டும், என்றார்.நபார்டு பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா ஆங்கிலத்தில் பேசியதை, திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் விவசாயிகளுக்கு மொழி பெயர்த்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அகிலன், முன்னோடி விவசாயிகள், விஞ்ஞானிகள் பங்கேற்றனர். உதவி பேராசிரியர் பாஸ்கரன் நன்றி கூறினார். பருவநிலை மாற்றத்திற்கேற்ற நீடித்த நிலையான ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் குறித்த கையேட்டை நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் அம்பேத்கர் வெளியிட நபார்டு வங்கி பொது மேலாளர் வெங்கட்டகிருஷ்ணா பெற்றுக் கொண்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X