பொது செய்தி

தமிழ்நாடு

குடிசைப்பகுதி மாற்று வாரியம் வழங்கும் அடையாள அட்டை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுரை : மதுரையில் கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் மாநகராட்சி வார்டு எண் 49 ஆத்திகுளத்தில் 304 பழைய குடியிருப்புகள், வார்டு எண் 10 ஆரப்பாளையம் மஞ்சள்மேட்டில் 300 பழைய குடியிருப்புகள்

மதுரை : மதுரையில் கலெக்டர் அனீஷ்சேகர் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தில் மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் மாநகராட்சி வார்டு எண் 49 ஆத்திகுளத்தில் 304 பழைய குடியிருப்புகள், வார்டு எண் 10 ஆரப்பாளையம் மஞ்சள்மேட்டில் 300 பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு இரு இடங்களிலும் தலா 320 புதிய குடியிருப்புகள் கட்டப்படுகின்றன.இக்குடியிருப்புகளில் இடிப்பதற்கு முன்பு வரை குடியிருந்தவர்கள் குடிசைப்பகுதி மாற்று வாரிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.

பெறாதவர்கள் குடியிருந்ததற்கான ஆதாரம், ஆவணங்களுடன் ஆக., 23 முதல் 27 வரை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், மதுரை கோட்டம், 169, கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை-625 020 முகவரியில் அலுவலக வேலைநாட்களில் பெறலாம், என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X