பொது செய்தி

தமிழ்நாடு

என்.எல்.சி., நுாலகத்தில் புதிய வசதி துவக்கி வைப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
நெய்வேலி-என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் நுாலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அலமாரியை மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் திறந்து வைத்தார். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18 ல் உள்ள என்.எல்.சி.,பொது நுாலகத்தில் 'கொடை புத்தக அலமாரி' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி., நகர நிர்வாக பொது மேலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். உதவி நகர நிர்வாக

நெய்வேலி-என்.எல்.சி.,இந்தியா நிறுவனத்தின் நுாலகத்தில் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் அலமாரியை மனிதவளத் துறை இயக்குநர் விக்ரமன் திறந்து வைத்தார். நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 18 ல் உள்ள என்.எல்.சி.,பொது நுாலகத்தில் 'கொடை புத்தக அலமாரி' எனும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்.எல்.சி., நகர நிர்வாக பொது மேலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். உதவி நகர நிர்வாக அதிகாரி முகமது அப்துல் காதர், துணை பொது மேலாளர்கள் கனகராஜ், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்.எல்.சி.,கல்வித்துறை செயலர் நாகராஜன் வரவேற்றார்.என்.எல்.சி., மனித வளத்துறை இயக்குநர் விக்ரமன் புதிய வசதியை துவக்கி வைத்து பேசுகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகள் உயர் கல்விக்கு தேவையான கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறை தொடர்பான புத்தகங்கள் மட்டுமின்றி கேட், சி.ஏ.டி.,, போன்ற போட்டி நுழைவு தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்களும் ஒரு ஆண்டுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும், ஏற்கனவே கல்லுாரி படிப்பை முடித்தவர்கள் மற்றும் பணியில் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய புத்தகங்களை இந்த கொடை நுாலகத்திற்கு வழங்க வேண்டும். இதனால் பல மாணவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும். மாணவர்களின் தேவைக்கேற்ப புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X