துரிதப்படுத்தப்படுமா-மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை, மராமத்து பணி...செப்.,1ல் திறக்க உள்ளதால் துரித நடவடிக்கை தேவை| Dinamalar

தமிழ்நாடு

துரிதப்படுத்தப்படுமா-மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை, மராமத்து பணி...செப்.,1ல் திறக்க உள்ளதால் துரித நடவடிக்கை தேவை

Added : ஆக 20, 2021
Share
கடலுார்-கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, செப்., 1ல் திறக்க முடிவு செய்துள்ளதால், பள்ளிகளில் துாய்மை மற்றும் மராமத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. பரவல் குறைந்ததால், பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு, கடந்த ஜனவரி 8ம்
 துரிதப்படுத்தப்படுமா-மாவட்டத்தில் பள்ளிகளில் தூய்மை, மராமத்து பணி...செப்.,1ல் திறக்க உள்ளதால் துரித நடவடிக்கை தேவை

கடலுார்-கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, செப்., 1ல் திறக்க முடிவு செய்துள்ளதால், பள்ளிகளில் துாய்மை மற்றும் மராமத்து பணிகளை துரிதமாக மேற்கொள்ள பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020 மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. பரவல் குறைந்ததால், பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டு, கடந்த ஜனவரி 8ம் தேதி கல்லுாரிகளும், 19ம் தேதி 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகள், பிப்., 8ம் தேதி 9ம் வகுப்புகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன.

ஆனால், கொரோனா 2ம் அலையின் தாக்கத்தால் மீண்டும் மூடப்பட்டன.பின், 2020- - 21 கல்வியாண்டு முழுவதும் ஆன் லைன் வகுப்புகள் நடந்தன. தேர்வு ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தனர். இந்த கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை முடித்து, பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டது. பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வந்தது.இந்நிலையில், நாடு முழுதும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது. அதையொட்டி, வரும் செப்., 1ம் தேதி பள்ளிகளை திறந்து, 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளை நடத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பள்ளிக் கல்வித் துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவு சி.இ.ஓ., அலுவலகம் மூலம் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு அனுப்பி வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட உள்ளனர்.பராமரிப்பு பணிபள்ளிகள் பல மாதங்களாக மூடியிருந்ததால், கடலுார் மாவட்டத்தில் பல கட்டடங்கள் வீணாகியுள்ளன. குடிநீர் குழாய்கள், குடிநீர் டேங்க், கழிப்பறை வசதிகள், இருக்கைகள் பராமரிக்க வேண்டியுள்ளது.

மின்சார லைன்களை சரி செய்ய வேண்டும். பள்ளிகள் திறக்க 10 நாட்களே உள்ள நிலையில், துாய்மை உள்ளிட்ட மராமத்து பணிகளை மேற்கொள்ள தேவையான நிதியுதவி மற்றும் பணியாட்களை பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் இது வரை கடலுார் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை இறங்கவில்லை. இதனால், பள்ளிகளில் துாய்மை, மராமத்து பணிகள் ஒப்புக்கு நடக்கும் நிலை உருவாகும்.

இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டு, பள்ளிகளில் துாய்மை, மராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தந்த கல்வி மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் முதல்வர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முயற்சியால் வர்ணம் பூசுதல், சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஒருசில பள்ளிகளில் இப்பணி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X