இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த பயிற்சி

Added : ஆக 20, 2021
Share
இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மதுரை மண்டல இணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அவருடன் பேசியதிலிருந்து...துறையில் எத்தனை மண்டலங்கள்?தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்
இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த பயிற்சி

இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு திறன்வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது என தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மதுரை மண்டல இணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அவருடன் பேசியதிலிருந்து...

துறையில் எத்தனை மண்டலங்கள்?

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாநிலத்தில் சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை, நெல்லை என ஆறு மண்டலங்களாக செயல்படுகிறது. மைய இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீரராகவராவ் உள்ளார்.மதுரை மண்டலத்தில் எத்தனை மாவட்டங்கள் உள்ளன?மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய வருவாய் மாவட்டங்கள் உள்ளன.

இம்மண்டலத்தில் எத்தனை பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்?

மதுரை மாவட்டத்தில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 362, திண்டுக்கல்லில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 781, தேனியில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 309, ராமநாதபுரத்தில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 867, சிவகங்கையில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 631, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து551 பேர் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருக்கின்றனர்.இவர்களுடன் தொழிற்கல்வி முடித்தவர்கள் 3 லட்சத்து 53 ஆயிரத்து 919 பேர் பதிவு செய்துள்ளனர். இம்மண்டலத்தில் மட்டும் 13 லட்சத்து 36 ஆயிரத்து 425 பட்டதாரிகள் பதிவு செய்துள்ளனர்.

இவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை?

வேலைவாய்ப்புக்காக பதிவு செய்து ஐந்தாண்டுகளாக காத்திருப்போருக்கு ஆண்டு குடும்ப வருவாய் குறிப்பிட்ட தொகைக்குள் இருந்தால் மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது. எஸ்.எஸ்.எல்.சி.,முடித்தவர்களுக்கு ரூ.200, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டம்முடித்தவர்களுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு பெற எந்த வகையில் துறை உதவியாக உள்ளது?

குறைவான கல்வி தகுதியுள்ளவர்களுக்கு உள்ளூர் வேலை வாய்ப்பு பெற்று கொடுக்கப்படுகிறது. பதிவு மூப்பு அடிப்படையில் இந்த பணி நியமனம் வெளிப்படையாக நடக்கிறது. தற்போது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், போலீஸ்சீருடை பணியாளர் தேர்வாணையம், வங்கி தேர்வாணையம் ஆகியவை போட்டித் தேர்வுகளை நடத்தி ஆட்களை தேர்வு செய்கின்றன. அந்த தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள தேவையான உதவிகளை துறை சார்பில் செய்கிறோம்.

எந்த வகையில்?

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் தன்னார்வ பயிலும் வட்டம் என்ற பெயரில்நுாலகங்கள் செயல்படுகின்றன. இங்கு போட்டி தேர்வுக்கு உதவும் ஏராளமான புத்தகங்கள்உள்ளன. பல்வேறு துறை வல்லுனர்கள், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று அரசு, வங்கி பணியில் சேர்ந்துள்ளவர்களை கொண்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

அங்கு பயிற்சி பெற்றவர்கள் அரசு, வங்கி பணிகளில் சேர்ந்துள்ளனரா?

மண்டலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமானோர் அரசு பணிகளில் சேர்ந்துள்ளனர்.தற்போது கொரோனா சூழலால்போட்டி தேர்வுகள் நடக்கவில்லை. போட்டி தேர்வுகள்நடந்தபோது மண்டலத்தில்ஆண்டுக்கு நுாற்றுக்கும் மேற்பட்டோர் அரசு, வங்கி பணிகளில் சேர்ந்துஉள்ளனர்.

தனியார் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு பெற்று தரப்படுகிறதா

தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற அதற்காக துறை வெப்சைட்டில் ஒரு போர்ட்டல் செயல்படுகிறது. அதில் பதிவு செய்து பார்த்தாலே தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். சில தனியார் நிறுவனங்கள்துறையை கேட்டு கொள்ளும்போது அந்தந்த மாவட்டங்களில் இலவச வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி கொடுக்கிறோம். அதில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தேவையான ஆட்களை தேர்வு செய்கின்றன.

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் உதவியாகவுள்ளது. வெளிநாடுகளில் தேவைப்படும் பணியாளர்கள் குறித்து கார்ப்பரேஷன் அறிவிப்பு வெளியிட்டு ஆட்களை தேர்வு செய்து ஆட்களை கோரும் நாடுகளுக்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு மண்டல இணை இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X