பொது செய்தி

தமிழ்நாடு

டி.எம்.எஸ்.,சுக்கு இசை அஞ்சலி 'பாரத் கலாசார்' ஏற்பாடு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை-'பாரத் கலாசார்' சார்பில் 'மெஜஸ்டிக் சிங்கர்' என்ற நான்கு நாள் 'ஆன்லைன்' இசை நிகழ்ச்சி வாயிலாக, மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.எஸ்.,சுக்கு இசை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மறைந்த பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.எஸ்., என அழைக்கப்படும், டி.எம்.சவுந்தரராஜனுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக, 'பாரத் கலாசார்' சார்பில் 'மெஜஸ்டிக்

சென்னை-'பாரத் கலாசார்' சார்பில் 'மெஜஸ்டிக் சிங்கர்' என்ற நான்கு நாள் 'ஆன்லைன்' இசை நிகழ்ச்சி வாயிலாக, மறைந்த பழம்பெரும் பாடகர் டி.எம்.எஸ்.,சுக்கு இசை அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மறைந்த பழம்பெரும் திரைப்பட பின்னணி பாடகர் டி.எம்.எஸ்., என அழைக்கப்படும், டி.எம்.சவுந்தரராஜனுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விதமாக, 'பாரத் கலாசார்' சார்பில் 'மெஜஸ்டிக் சிங்கர்' என்ற ஆன்லைன் நிகழ்ச்சி நடக்க உள்ளது.'பாரத் கலாசார்' அப்பாஸ் மற்றும் ரோஷ்னி ஆகியோர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியை, Kalakendra.com வாயிலாக மக்கள் கண்டுகளிக்கலாம்.இதில், ஒய்.ஜி.மகேந்திரன், தன் தனித்துவமான பாணியில் 'காம்பேயரிங்' செய்ய உள்ளார். இதில், பிரபல பாடகர்கள் அனந்து முகேஷ், ஜானகி, பவித்ரா, அனுஷா, நாகேஷ் பாண்டியன் மற்றும் சிகாகோ ராமா ஆகியோர் பாடல்களை பாட உள்ளனர்.இந்த நிகழ்ச்சி, வரும் 27ம் தேதி மாலை 6:00 மணி முதல், 30ம் தேதி மாலை 6:00 மணி வரை நடைபெறும். நிகழ்ச்சிக்கான டிக்கெட், https://kalakendra.com/agalamusicaltributetotms/ என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம்.நிகழ்ச்சியில் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வீடான, சீர்காழி அன்பாலயத்திற்கு வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X