பொது செய்தி

தமிழ்நாடு

திரு.வி.க.,விற்கு மணிமண்டபம் மெட்ரோவுக்கும் பெயர் சூட்ட கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை-'தமிழ்த்தென்றல்' திரு.வி.க.,வின் சொந்த ஊரான தண்டலம் கிராமத்தில், அவர் நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.தமிழக வரலாற்றை, பண்பாட்டை வளப்படுத்திய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.இவர், உயரிய மனிதப் பண்புகளை அணிகலனாக கொண்டவர். கலப்புத் திருமணத்திற்கும், விதவை மறுமணத்திற்கும் ஊக்கமளித்தவர்.

சென்னை-'தமிழ்த்தென்றல்' திரு.வி.க.,வின் சொந்த ஊரான தண்டலம் கிராமத்தில், அவர் நினைவாக மணிமண்டபம் கட்ட வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.தமிழக வரலாற்றை, பண்பாட்டை வளப்படுத்திய ஆளுமைகளில் குறிப்பிடத்தக்கவர் திரு.வி.கல்யாணசுந்தரனார்.இவர், உயரிய மனிதப் பண்புகளை அணிகலனாக கொண்டவர். கலப்புத் திருமணத்திற்கும், விதவை மறுமணத்திற்கும் ஊக்கமளித்தவர். பெண்களுக்கு சொத்துரிமை கிடைப்பதற்காகப் பாடுபட்டவர்.அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் முதன்முதலில் தொழிற்சங்கத்தை தோற்றுவித்தவர்; தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க போராடியர் என, பன்முக தன்மை கொண்ட இவர், தமிழ் மீதும் சமூகத்தின் மீதும் கொண்டிருந்த பற்றை இவ்வாறு கூறிக்கொண்டே செல்லலாம்.அரசு விழாஇவர், 1883ம் ஆண்டு ஆக., 26ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலம் என்ற கிராமத்தில் பிறந்தார். தற்போது, அவர் பிறந்த பகுதி, சென்னை மாநகராட்சி எல்லையில் அமைந்துள்ளது.அவர் பிறந்து வசித்த இடத்தில், திரு.வி.க., நினைவாக ஒரு நுாலகத்தை அரசு அமைத்துள்ளது. கடந்த 2018ல் இருந்து, திரு.வி.க.,வின் பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.அதேபோல், திரு.வி.க.,வின் புகழை, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அவர் பிறந்த போரூரை அடுத்த தண்டலம் கிராமத்தில், மணிமண்டபம் அமைக்க வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள், பல ஆண்டுகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும், போரூரில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கும், திரு.வி.க., பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X