ஜோயாலுக்காஸ் பிரைடல் பீஸ்ட் 30 சதவீதம் தள்ளுபடி சலுகை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜோயாலுக்காஸ் 'பிரைடல் பீஸ்ட்' 30 சதவீதம் தள்ளுபடி சலுகை

Added : ஆக 20, 2021
Share
சென்னை-ஜோயாலுக்காஸ் நிறுவனம், 'பிரைடல் பீஸ்ட்' என்ற பெயரில் திருமண சீசனை முன்னிட்டு, பாரம்பரிய நகைகளை அறிமுகம் செய்து, தள்ளுபடி சலுகைகளையும் அறிவித்துள்ளது.தங்க ஆபரணங்கள் விற்பனையில், ஜோயாலுக்காஸ் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், ஜோயாலுக்காஸ் பிரைடல் பெஸ்ட் என்ற பெயரில், திருமணத்திற்கான நவநாகரிக மற்றும் பாரம்பரிய மணப்பெண் நகைகளை அறிமுகம் செய்துள்ளது.இதன் ஒரு

சென்னை-ஜோயாலுக்காஸ் நிறுவனம், 'பிரைடல் பீஸ்ட்' என்ற பெயரில் திருமண சீசனை முன்னிட்டு, பாரம்பரிய நகைகளை அறிமுகம் செய்து, தள்ளுபடி சலுகைகளையும் அறிவித்துள்ளது.தங்க ஆபரணங்கள் விற்பனையில், ஜோயாலுக்காஸ் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், ஜோயாலுக்காஸ் பிரைடல் பெஸ்ட் என்ற பெயரில், திருமணத்திற்கான நவநாகரிக மற்றும் பாரம்பரிய மணப்பெண் நகைகளை அறிமுகம் செய்துள்ளது.இதன் ஒரு பகுதியாக, அனைத்து நகைகளுக்கும் செய்கூலி கட்டணம் வசூலிக்காமல், 'வேஸ்டேஜில்' 30 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது.இது குறித்து, ஜோயாலுக்காஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் அலுக்காஸ் கூறியதாவது:திருமண சீசனுக்கான சமயத்தில், தங்கத்தின் விலைகள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. எங்கள் தள்ளுபடி சலுகைகளுடன், மேலும் வாடிக்கையாளர்கள் சேமிப்பை பயன்படுத்தி கொள்ளலாம். திருமண நகை சேகரிப்பில், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், திருமணத்திற்கான புதிய வடிவில் அழகிய ஆபரணங்களை வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.ஜோயாலுக்காஸ் ஷோரூம்களில், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, ஒரே சமயத்தில் குறைந்த எண்ணிக்கையில் வாடிக்கையாளரை அனுமதிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X