பொது செய்தி

தமிழ்நாடு

புகைப்பட கலைஞர்களை ஊக்குவித்த கமிஷனர்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை-உலக புகைப்பட தினத்தையொட்டி, அடையாறு இந்திரா நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி, புகைப்படக் கலைஞர்களை 'போட்டோ' எடுத்து, அவர்களை ஊக்குவித்தார்.கடந்த 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார்.பின், 1839ஆம் ஆண்டு ஜன., 9ல், பிரான்ஸ்
 புகைப்பட கலைஞர்களை ஊக்குவித்த கமிஷனர்

சென்னை-உலக புகைப்பட தினத்தையொட்டி, அடையாறு இந்திரா நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடி, புகைப்படக் கலைஞர்களை 'போட்டோ' எடுத்து, அவர்களை ஊக்குவித்தார்.கடந்த 19ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், லுாயிசு டாகுவேரே என்பவர், டாகுரியோடைப் எனப்படும் புகைப்படத்தின் செயல்பாடு முறையை வடிவமைத்தார்.பின், 1839ஆம் ஆண்டு ஜன., 9ல், பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ், இம்முறைக்கு ஒப்புதல் அளித்தது. ஆக., 19ல், பிரான்ஸ் நாட்டு அரசு, டாகுரியோடைப் செயல்பாடுகளை, 'ப்ரீ டூ தி வேர்ல்டு' என, உலகம் முழுதும் அறிவித்ததை எடுத்துரைக்கும் வகையில், உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது.அதன்படி, ஒவ்வோர் ஆண்டும், புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக் கலைஞர்களின் திறமையை கொண்டாடும் வகையிலும், மாநில புகைப்பட கலைஞர்கள் சங்கத்தினர் கொண்டாடி வருகின்றனர்.இதையொட்டி, சென்னை, அடையாறு, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சியில், புகைப்பட கலைஞர்கள், மரக்கன்றுகள் நட்டு கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பங்கேற்று, புகைப்பட கலைஞர்களை புகைப்படம் எடுத்து ஊக்குவித்தார்.அப்போது, 'சிங்கார சென்னை - 2.0 திட்டத்தின் வாயிலாக, சென்னை முழுதும், 2 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்' என தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X