தமிழகம் முழுதும் இலவச பயணம்; மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகம் முழுதும் இலவச பயணம்; மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
சென்னை--'நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்தபடி, மாநிலம் முழுதும் மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்' என, மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் கூறியிருப்பதாவது:முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், பெண்கள், திருநங்கையர் போல மாற்றுத் திறனாளிகள், நகர

சென்னை--'நிதிநிலை அறிக்கையில் முதல்வர் அறிவித்தபடி, மாநிலம் முழுதும் மாற்றுத் திறனாளிகள் அரசு பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்' என, மாற்று திறனாளிகள் கூட்டமைப்பு கோரியுள்ளது.இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் சிம்மச்சந்திரன் கூறியிருப்பதாவது:முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், பெண்கள், திருநங்கையர் போல மாற்றுத் திறனாளிகள், நகர பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது.இந்நிலையில், சட்டசபை நிதிநிலை அறிக்கையின்போது, மாற்று திறனாளிகள் அனைவரும் தனது உதவியாளர் ஒருவருடன் மாநிலம் முழுதும் இயங்கும் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என, நிதியமைச்சர் வாசித்தார்.நிதிநிலை மானியக் கோரிக்கையிலும் பதிவானது. இதை கேட்டு தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஆனால், மாற்றுத் திறனாளிகள் துறையின் அதிகாரிகளோ, அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அது தவறுதலான பதிவு என, மறுத்து வருகின்றனர்.மாற்றுத் திறனாளிகள் நலத்துறையை தன் வசம் வைத்துள்ள முதல்வர், அரசின் அறிவிப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்கான அரசாணை வெளியிட்டு, மாற்று திறனாளிகளை மகிழ்விக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X