பொது செய்தி

தமிழ்நாடு

'நியூபெர்க்' பிராண்ட் துாதராக எம்.எஸ்.தோனி நியமனம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை-'நியூபெர்க் டயகனாஸ்டிக்ஸ்' ஆய்வகத்தின் பிராண்ட் துாதராக, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து, நியூபெர்க் டயகனாஸ்டிக்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு கூறியதாவது:எங்கள் வளர்ச்சியின் முழுமையை வெளிப்படுத்தும் அடையாள சின்னமாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பாக பொருந்துகிறார். அவருடன் இணைந்து

சென்னை-'நியூபெர்க் டயகனாஸ்டிக்ஸ்' ஆய்வகத்தின் பிராண்ட் துாதராக, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து, நியூபெர்க் டயகனாஸ்டிக்ஸ் நிறுவன தலைவர் டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு கூறியதாவது:எங்கள் வளர்ச்சியின் முழுமையை வெளிப்படுத்தும் அடையாள சின்னமாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி சிறப்பாக பொருந்துகிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடையகிறோம்.இதன் வாயிலாக, நாடு முழுதும் எங்களது சேவையை எடுத்து செல்ல ஆர்வமாக இருக்கிறோம். உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதில், தோனியின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த உத்வேகத்தை தரும். எங்கள் நிறுவனத்தின் சிறப்பை, பிராண்ட் துாதராக உலகளவில் அவர் எடுத்து செல்ல இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.கிரிக்கெட் வீரர் தோனி கூறியதாவது:நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறப்பான, மலிவான சுகாதார பாதுகாப்பு வழங்குவதில், நியூபெர்க் முன்னணியில் உள்ளது. கொரோனா தொற்று காலத்தில், உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை, நியூபெர்க் ஏற்படுத்தி உள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X