சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ஓட்டேரி--ஓட்டேரியில் கட்டுமான நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை பகுதியில் எஸ்.பி.ஆர்., என்ற கட்டுமான நிறுவனம், 35 ஏக்கரில் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி வருகிறது.அந்நிறுவன வாடிக்கையாளர்களின் உதவிக்காக செயல்பட்டு வரும் 'கால் சென்டர்' எண்ணில், நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர்,

ஓட்டேரி--ஓட்டேரியில் கட்டுமான நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஓட்டேரி, ஸ்டீபன்சன் சாலை பகுதியில் எஸ்.பி.ஆர்., என்ற கட்டுமான நிறுவனம், 35 ஏக்கரில் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி வருகிறது.அந்நிறுவன வாடிக்கையாளர்களின் உதவிக்காக செயல்பட்டு வரும் 'கால் சென்டர்' எண்ணில், நேற்று முன்தினம் இரவு தொடர்பு கொண்ட மர்ம நபர், 'சி4 எக்ஸ்ப்ளோசிவ்' பற்றி தெரியுமா?' எனக்கேட்டு, இணைப்பை துண்டித்துள்ளார்.தொடர்ந்து, எஸ்.எம்.எஸ்., வாயிலாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைய அடுத்து, அன்றைய தினம் நள்ளிரவு 11:00 மணிக்கு, புளியந்தோப்பு துணை கமிஷனரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, புளியந்தோப்பு உதவி கமிஷனர் அழகேசன் உட்பட, வெடிகுண்டு கண்டறியும் போலீசார், நள்ளிரவு 1:15 மணி முதல் நடந்த சோதனை நேற்று மாலை 5:15 மணியளவில் நிறைவடைந்தது. இதில் வெடிப் பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை.தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X