பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிற்கு ரூ.1.50 லட்சம் கட்ட உத்தரவு சத்தியமூர்த்தி நகர் மக்கள் கொதிப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வியாசர்பாடி--குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியேற, 1.50 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற, வாரிய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மக்கள் நேற்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. 3 மாடி கொண்ட இந்த வீடுகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து
 வீட்டிற்கு ரூ.1.50 லட்சம் கட்ட உத்தரவு சத்தியமூர்த்தி நகர் மக்கள் கொதிப்பு

வியாசர்பாடி--குடிசை மாற்று வாரிய வீடுகளில் குடியேற, 1.50 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்ற, வாரிய அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர் மக்கள் நேற்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளன. 3 மாடி கொண்ட இந்த வீடுகளில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இக்கட்டடம் பழுதடைந்து, மிகவும் மோசமான நிலையில் இருந்தது. வாழ்வாதாரம் பாதிப்புஎனவே, பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிதாக, 60 கோடியில், 13 மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.இந்நிலையில், ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் தான், புதிய வீடு வழங்கப்படும் என, குடிசை மாற்று வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பு பலகையும், புதிய குடியிருப்பு வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாசர்பாடியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, சத்தியமூர்த்தி நகர் மக்கள், நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.இதுகுறித்து சத்தியமூர்த்தி நகர் மக்கள் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளுக்‍கு முன், மூன்று மாடி குடியிருப்புகள் பழுதடைந்ததாகக் ‍கூறி, அவை இடிக்‍கப்பட்டு, தற்போது அதே இடத்தில், 13 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது.அத்துடன், இங்கு பல ஆண்டுகளாக வசித்து வந்த எங்களுக்கு, பணம் கொடுத்தால் தான் வீடு தருவதாக கூறுகின்றனர். தனியார் வங்கி மூலம் கடன் பெற குடிசை மாற்று வாரியம் உதவுவதாகவும் கூறுகின்றனர்.கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்துள்ளோம். நிர்பந்தம்கூலித் தொழிலாளிகளான நாங்கள் நிலையான வருமானமின்றி உள்ளோம். எங்களை லட்சக்கணக்கில் பணம் செலுத்தச் சொல்லி நிர்பந்திப்பது நியாயமா? தற்போது வசிக்கும் வீட்டிற்கே வாடகை கொடுக்க முடியாத நிலை உள்ளது. உடனடியாக குடிசை மாற்று வாரிய வீடுகளை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 1.5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் வீடுகளை ஒதுக்குவோம் என, குடிசை மாற்று வாரியம் அறிவித்துள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X