சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: எஸ்.ஐ., மற்றும் கட்டுமான நிறுவனம் மீது புகார்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தாம்பரம்--பழைய பெருங்களத்துாரில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, குழந்தை இறந்த சம்பவத்தில், பீர்க்கன்காரணை காவல் நிலைய, எஸ்.ஐ., மற்றும் கட்டுமான நிறுவனம் மீது, தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த இளவரசன்கோட்டையைச் சேர்ந்தவர், சிவா, 33; கட்டட தொழிலாளி.கூலித் தொழில்இவர், முன்தினம் பழைய

தாம்பரம்--பழைய பெருங்களத்துாரில், தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து, குழந்தை இறந்த சம்பவத்தில், பீர்க்கன்காரணை காவல் நிலைய, எஸ்.ஐ., மற்றும் கட்டுமான நிறுவனம் மீது, தென் சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அடுத்த இளவரசன்கோட்டையைச் சேர்ந்தவர், சிவா, 33; கட்டட தொழிலாளி.கூலித் தொழில்இவர், முன்தினம் பழைய பெருங்களத்துார் சமத்துவ பெரியார் நகருக்கு வேலைக்கு சென்றபோது, தன் மகன் ஜீவா, 4, உடன் அழைத்து சென்றார்.அங்கு, தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி குழந்தை பரிதாபமாக பலியானது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.இந்நிலையில், சிவாவின் மனைவி ரஞ்சிதம், 30, தென் சென்னை இணை கமிஷனரிடம் நேற்று அளித்துள்ள மனு:நானும் கணவரும் கட்டுமான கூலித் தொழிலாளிகளாக பணிபுரிகிறோம். எங்களுக்கு பூமிகா, 8, ஜீவா, 4, என, இரு குழந்தைகள். நாங்கள் வேலைக்கு செல்லும் இடங்களில் ஜீவாவையும் அழைத்து செல்வோம். நேற்று முன்தினம் காலை, குழந்தையுடன் வேலைக்கு வருவதை கண்ட, நாங்கள் வேலை செய்யும், 'ஸ்ரீமதி கன்ஸ்டரக் ஷன்ஸ்' எனும் கட்டுமான நிறுவனத்தின் பொறியாளர், குழந்தையை தரைத்தளத்தில் விட்டு, பணிக்கு செல்லுமாறு கூறினார்.பகல், 12:00 மணிக்கு, குழந்தைக்கு, டீ மற்றும் பன் ஆகியவற்றை சாப்பிட கொடுத்து, 1:00 மணிக்கு பார்த்தபோது காணவில்லை.தேடியபோது தண்ணீர் தொட்டிக்குள், மயங்கிய நிலையில் ஜீவா கிடந்தான். அவனை மருத்துவமனை கொண்டு சென்ற போது, இறந்ததாக டாக்டர்கள் கூறினர்.அதட்டல்என் குழந்தையின் இறப்பிற்கு, ஸ்ரீமதி கன்ஸ்டரக் ஷன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்கள் தான் காரணம்.மேலும், நேற்று முன்தினம் இரவு, இது பற்றி புகார் அளிக்க, என் கணவர் சென்றபோது, பீர்க்கன்கரணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா, அவராக ஒரு புகாரை தயாரித்து, 'அதில் கையெழுத்திடாவிட்டால் ஐந்து நாட்களானாலும், குழந்தையின் உடலை வாங்க முடியாது' என, மிரட்டி உள்ளார்.வேறு வழியின்றி, அதில் கையெழுத்திட்ட என் கணவர், குழந்தையின் இறப்பிற்கு காரணம் கேட்டபோது, 'மரியாதையாக குழந்தையின் உடலை வாங்கிச் செல்' என அதட்டி உள்ளார்.என் குழந்தையின் இறப்பிற்கு காரணமானோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X