பொது செய்தி

தமிழ்நாடு

தாம்பரம் நகராட்சியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தாம்பரம்--தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில், செங்கல்பட்டு கலெக்டர், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில், நேற்று வந்த செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் தாம்பரம் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, இ - சேவை மையத்தில், திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு முறையான தகவல்கள், சேவை கட்டணங்கள்

தாம்பரம்--தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில், செங்கல்பட்டு கலெக்டர், நேற்று ஆய்வு மேற்கொண்டார்.தாம்பரம் நகராட்சி அலுவலகத்தில், நேற்று வந்த செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் தாம்பரம் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, இ - சேவை மையத்தில், திடீரென ஆய்வு மேற்கொண்டார். அங்கு முறையான தகவல்கள், சேவை கட்டணங்கள் குறித்த விபரங்களை, விளம்பர பலகையில் வைக்க உத்தரவிட்டார்.'ஆதார்' கார்டு எடுக்க வரும் பொதுமக்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.அங்கு, நீண்டநேரமாக காத்திருந்த பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டார்.பொதுமக்கள் அமர கூடுதல் நாற்காலிகள் அமைக்கவும், கூட்ட நெரிசலை தவிர்க்க இ- - சேவை மையத்தில் நீண்டகாலமாக அடைக்கப்பட்டிருந்த, கிரில் கேட்டை திறக்கவும் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X