தமிழ்நாடு

வண்ண மீன் உற்பத்தி பாதிக்கும் அவலம்; முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
நெருக்கடி, எளிதில் நோய் தாக்குவது உள்ளிட்ட காரணங்களால், கொளத்துாரில் வண்ண மீன் உற்பத்தி பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.தொழிலை மேம்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை, கொளத்துார் வண்ண மீன்களின் தாய்மடி என அழைக்கப்படுகிறது. இங்கு பெரிதும் சிறிதுமாக, 2,000க்கும் மேற்பட்ட வண்ண மீன் பண்ணைகள் உள்ளன.மந்தநிலைகொளத்துாரில் வண்ண மீன்
 வண்ண மீன் உற்பத்தி பாதிக்கும் அவலம்; முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நெருக்கடி, எளிதில் நோய் தாக்குவது உள்ளிட்ட காரணங்களால், கொளத்துாரில் வண்ண மீன் உற்பத்தி பாதிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.தொழிலை மேம்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

சென்னை, கொளத்துார் வண்ண மீன்களின் தாய்மடி என அழைக்கப்படுகிறது. இங்கு பெரிதும் சிறிதுமாக, 2,000க்கும் மேற்பட்ட வண்ண மீன் பண்ணைகள் உள்ளன.மந்தநிலைகொளத்துாரில் வண்ண மீன் விற்பனைக்கு பெயர் பெற்ற பாடசாலை தெரு, தெற்கு மாடவீதி ஆகிய தெருக்களில், 200க்கும் மேற்பட்ட வண்ண மீன் விற்பனை கடைகள் உள்ளன.இங்கு தற்போது, 'கோல்டு பிஷ், பிளாக் மோர், ஏஞ்சல், டைகர், பைட்டர்' உள்ளிட்ட, 300க்கும் மேற்பட்ட வகைகளில் மீன்கள் கிடைக்கின்றன.பத்துக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து மீன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேபோல், பல வெளிநாடுகளில் இருந்தும் மீன் வகைகள் இறக்குமதியாகின்றன.இதனால், வண்ண மீன்களை அடிப்படையாக கொண்டு, விதவிதமான மீன் தொட்டிகள், வண்ண மீன் வளர்க்க குளங்கள் அமைப்போர் என, பலர் இத்தொழிலில் ஈடுபடுவதால், விரிவடைந்து கொண்டே செல்கிறது.கொரோனா தொற்று பரவலுக்கு பின், வேலைகளை இழந்த பலர், வண்ண மீன்கள் விற்பனையில் இறங்கியுள்ளனர். பலர் இதை நம்பி குடிசை தொழிலாக செய்கின்றனர். வீடுகளில் இருந்தே 'ஆன்லைன்' வாயிலாக வண்ண மீன்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மக்களின் பொருளாதார நெருக்கடியால் விற்பனை மந்தநிலையில் தான் உள்ளது.மானியம்ஆனாலும், வண்ண மீன்கள் உற்பத்தியை பெருக்குவதற்கான சிறந்த தொழில்நுட்ப வசதி உள்ளனவா என்றால், இதுவரை இல்லை என்பதே நிதர்சனம். எளிதில் நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வண்ண மீன்களுக்கு, எந்த மருந்து கொடுப்பது என்பதே சரிவர தெரியவில்லை.சந்தையில் கிடைக்கும் 'அக்ரிபிளேவின்' எனப்படும் ஒருவகை கிருமிநாசினியை மட்டுமே நம்பியுள்ளனர் மீன் உற்பத்தியாளர்கள்.பொருளாதார நிலை சரியானால் தான், மீன் விற்பனை சூடுபிடிக்கும் என்ற நிலை உள்ளது.மீன் வளர்ப்புக்கு, மத்திய அரசு மானியம் அளிக்கிறது. ஆனால் தமிழகத்தில், மீன் பண்ணை வைக்க மானியத்துடன் நிதி கேட்டால், பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ள மறுக்கின்றனர்.அதேபோல், வண்ண மீன்களுக்கு ஏற்படும் நோய்களை கண்டறிய, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல்லாண்டுகளாக கானல் நீராக மாறி வருகிறது.

அடையாளம்

இதுபோன்ற காரணங்களால் கொளத்துாரில் வண்ண மீன் உற்பத்தி வீழ்ச்சியுறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரின் சிறப்பு அடையாளமாக, வண்ண மீன் உற்பத்தி மற்றும் விற்பனை உள்ளது.இந்த தொழிலை மேம்படுத்த, அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, கொளத்துார் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
-- நமது நிருபர் --.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X