பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி-திருவல்லிக்கேணியில் நடந்த வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாமில், 650க்கும் மேற்பட்ட வணிகர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கம், வணிகவரித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து, நேற்று வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடத்தின.திருவல்லிக்கேணியில், தனியார் மண்டபத்தில் நடந்த

திருவல்லிக்கேணி-திருவல்லிக்கேணியில் நடந்த வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாமில், 650க்கும் மேற்பட்ட வணிகர்கள் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர்.திருவல்லிக்கேணி வியாபாரிகள் சங்கம், வணிகவரித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து, நேற்று வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நடத்தின.திருவல்லிக்கேணியில், தனியார் மண்டபத்தில் நடந்த இம்முகாமை, வணிக வரித்துறை துணை கமிஷனர் மணிமோகன் துவக்கி வைத்தார்.இதில், 650க்கும் மேற்பட்ட வணிகர்கள், தங்களது மாநகராட்சி வணிக உரிமம், சரக்கு மற்றும் சேவை வரி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களை சமர்ப்பித்து, உறுப்பினராக இணைந்தனர்.உறுப்பினராக இணைந்தவர்களுக்கு, புகைப்படம் ஒட்டப்பட்ட உறுப்பினர் அட்டை உடனுக்குடன் வழங்கப்பட்டன.வாரிய உறுப்பினர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குடும்ப நல நிதி உதவித் தொகையாக, 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் இதயம் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சைக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நலிவுற்ற வணிகர்கள் பெட்டிக்கடை வைக்க அல்லது மூன்று சக்கர மிதிவண்டி வாங்க, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் வாரிய உறுப்பினரின் கடையில் தீ விபத்து, இயற்கை பேரிடர் ஏற்பட்டால் 5,000 ரூபாய் வழங்கப்படும் உறுப்பினர்களின் பிள்ளைகளில் ஒருவருக்கு, கல்லுாரி படிப்புக்காக 5,000 மற்றும் தொழிற்கல்விக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X