பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் இயக்கமாக மாறுவதால் ஆர்வலர்களை அரசு ஊக்குவித்தால் 33 சதவீதமும் சாத்தியமே

Added : ஆக 20, 2021
Share
Advertisement
-உலக அளவில் குறைந்து வரும் பசுமை பரப்பால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து, இயற்கை பேரிடர்களை மனித குலம் சந்தித்து வருகிறது. இதன் எதிர்கால பாதிப்பை தவிர்க்க, பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விதிகளின் படி, நாட்டின் மொத்த பரப்பளவில், 33.3 சதவீதம் பசுமை போர்வை கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு

-உலக அளவில் குறைந்து வரும் பசுமை பரப்பால், புவி வெப்பமயமாதல் அதிகரித்து, இயற்கை பேரிடர்களை மனித குலம் சந்தித்து வருகிறது. இதன் எதிர்கால பாதிப்பை தவிர்க்க, பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம், அனைத்து நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட விதிகளின் படி, நாட்டின் மொத்த பரப்பளவில், 33.3 சதவீதம் பசுமை போர்வை கட்டாயம் இருக்க வேண்டும். இதற்கு அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.இலக்குஇதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, சென்னை மாநகரில், 2016 வர்தா புயல் தாக்கத்திற்கு பின், பசுமை பரப்பு வெறும் 5.5 சதவீதமாக குறைந்தது. அதை, 25 சதவீதமாக மாற்ற, பசுமை போர்வை திட்டத்தை மாநகராட்சி அறிவித்து, அதற்கான பணிகளில் தீவிரம் காட்ட துவங்கியது.முதல்கட்டமாக, ஏரிக்கரை, கால்வாய்கள் ஓரம், பூங்காக்கள், சுடுகாடுகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன. அரசால் மட்டுமே, பசுமை போர்வையை உருவாக்க முடியாது.இதில், தன்னார்வ அமைப்புகளையும், பொதுமக்களையும் ஈடுபடுத்தினால் மட்டுமே, இலக்கை நெருங்க முடியும் என்பதால், மரம் நடும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.இதன் பயனாக தற்போது, சென்னை பெருநகரின் பசுமை பரப்பு உயர்ந்துள்ளது. இந்த பரப்பை, 33 சதவீதமாக உயர்த்துவதற்காக மரம் வளர்ப்பு திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும்.இதில், அரசு துறைகளும், தன்னார்வ அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.தற்போதைய நிலவரப்படி, 1,189 சதுர கி.மீ.,யாக உள்ள சென்னை பெருநகரின் நில பரப்பில், 178 சதுர கி.மீ., அதாவது, 15 சதவீதம் மட்டுமே, மரங்கள் உள்ள பசுமை பகுதியாக உள்ளது. இதை, 33 சதவீதமாக உயர்த்த, காலி இடங்களில் மரங்களை வளர்க்கும் பணிகளை வனத்துறை முடுக்கிவிட்டுள்ளது.திட்டங்கள்இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுதும் பசுமை பரப்பை அதிகரிக்கும் பணிகளை, வனத்துறை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக, காப்பு காடுகளில் காலியாக உள்ள இடங்களில் மரங்களை வளர்க்க, மாவட்ட வன அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.சென்னை பெருநகரில், கிண்டி, நன்மங்கலம், மதுரப்பாக்கம், கோவிலாஞ்சேரி, வண்டலுார் உள்ளிட்ட காப்பு காடு பகுதிகளில் அடர் வன மேம்பாட்டு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.மேலும், நகர்ப்புறங்களில் பல்வேறு அரசு துறைகளுக்கு சொந்தமான காலி நிலங்களில், பயன் தரும் மரங்களை வளர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட வன அலுவலர்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு அலுவலக அதிகாரிகளுடன் இதற்கான பேச்சுக்களை துவக்கி உள்ளனர்.வழிமுறைஅடுத்த சில மாதங்களில், அரசு துறை காலி நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகள் துவங்கப்படும். இதில் உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வலர்களை ஈடுபடுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.காலியான இடங்களில் மரக்கன்றுகளை நடுவது என்ற அளவில் தான் தீவிர பிரசாரம் உள்ளது. இருக்கும் மரங்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை கடைப்பிடிப்பதிலும் அரசு துறைகள் கவனம் செலுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.சென்னையின் பசுமை நிலவரம்!* சென்னை பெருநகர் பரப்பளவு - 1,189 சதுர கி.மீ.,* மொத்த மக்கள் தொகை - 98.8 லட்சம்* 1 ச.கி.மீ.,க்கு மக்கள் அடர்த்தி - 14,350* மரங்கள் உள்ள பரப்பளவு - 178.35 சதுர கி.மீ., (15 சதவீதம்)* தனி நபர் பசுமை பகுதி பங்கீடு - 194 சதுர அடி* ஓ.எஸ்.ஆர்., நிலங்களின் பரப்பளவு - 3,444 ஏக்கர்* சாலைகள், வனம், நீர்நிலை பகுதிகள் - 78,829 ஏக்கர்பசுமை குழு முறையாக செயல்படுமா?'சென்னை உட்பட, தமிழகத்தில் பசுமை பகுதிகளை அதிகரிக்க, அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம், ஏப்., 30ல் உத்தரவிட்டது. அரசு மற்றும் தனியார் திட்டங்களுக்காக, மரங்கள் வெட்டப்படுவதை முறைப்படுத்தவும், பொது இடங்களில் உள்ள மரங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் அடிப்படையில் மாநில பசுமை குழுவை அமைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலர் தலைமையில், 10 பேர் குழு இதற்காக அமைக்கப்பட்டுஉள்ளது.தொழில், ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, காவல் துறை ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். வனத்துறை தலைவர் இதன் உறுப்பினர் செயலராக இருப்பார்.இதன் அடுத்த கட்டமாக, கலெக்டர்கள் தலைமையில் மாவட்ட பசுமை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வன அலுவலர், இதன் உறுப்பினர் செயலராக இருப்பார்.வருவாய், காவல், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் இதில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இக்குழு முறையாக செயல்பட்டால், பசுமை பகுதிகளை பாதுகாத்து மேம்படுத்த முடியும்.இடம் இருக்கு... மரம் தான் இல்ல!சென்னை இடநெருக்கடியான நகரம் என்று கூறப்பட்டாலும், மற்ற மாநகரங்களை காட்டிலும், இங்கு தான், அடையாறு ஆறு, கூவம் ஆறு, பகிங்ஹாம் கால்வாய் என மூன்று பெரிய நீர்வழித்தடங்களும், மாநகராட்சி பராமரிப்பில், 26 சிறிய நீர்வழித்தடங்களும் உள்ளன. இவற்றின் இருபக்க கரைகள் மட்டுமே, 636 கி.மீ., துாரத்திற்கு உள்ளன. இதைத்தவிர, மாநகர எல்லையில், ஏரி, குளம், குட்டை என, 126 நீர்நிலைகள் உள்ளன. இவற்றின் கரைகள் 113 கி.மீ., துாரத்திற்கு உள்ளன. மாநகரில், 500க்கும் மேற்பட்ட பூங்காக்கள், 100க்கும் மேற்பட்ட மயானங்கள் உள்ளன. இவற்றில் மட்டும் திட்டமிட்டு நடவு செய்தாலே, ஒரு லட்சம் மரக்கன்றுகளை தாராளமாக நடவு செய்யலாம். இதைத்தவிர்த்து, சாலையோரங்கள், அரசுக்கு சொந்தமான காலி நிலங்கள், வனப்பகுதிகளில் மரம் நடும் திட்டத்தை செயல்படுத்தலாம். தனியார் இடங்களில் மரம் நடும் திட்டத்தையும் ஊக்குவிக்கலாம். இப்படி செய்வதன் வாயிலாக, 33 சதவீதம் பசுமை பரப்பு என்ற இலக்கை, சென்னை மாநகரும் நிச்சயம் எட்டும்.தொடர் பராமரிப்பு அவசியம்!'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:நகரங்களில் பசுமை பகுதிகளை மேம்படுத்த வேண்டியது அனைவரின் கடமை. அதை எப்படி செய்கிறோம் என்பதில் தான், பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டியுள்ளது.பசுமை மேம்பாடு என்பதற்காக, மரக்கன்றுகளை நடுவது என்ற அளவிலேயே பலரும் நின்றுவிடுகிறோம். இத்தனை மரக்கன்றுகளை நட்டோம் என்பதுடன், இந்த முயற்சி முடங்கிவிட கூடாது.ஒரு இடத்தில் மரக்கன்றுகளை நடும் போதே, அதை தொடர்ந்து பராமரிக்க போவது யார் என்பதையும், அதை கண்காணிப்பது யார் என்பதையும் முடிவு செய்ய வேண்டும். மரக்கன்றுகள் நடுவோருக்கு பாராட்டுகள், விருதுகள் வழங்குவது போன்று, மரக்கன்றுகள் பராமரிப்பவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.எந்த இடத்தில் எத்தகைய மரக்கன்றுகளை நடுகிறோம் என்பது மிக முக்கியம். மண்ணின் தன்மைக்கும், அப்பகுதியின் சூழலுக்கும் ஏற்ற மரக்கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும்.பொருளாதார ரீதியாக பயன் தரும் மர வகைகளை தேர்வு செய்தாலும் நல்லது தான். இதற்கு வனத்துறையின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும். பசுமை பகுதி மேம்பாடு என்பதில், மரங்களை வளர்ப்பது தனிப்பட்ட பணி அல்ல. அது சார்ந்த பல்வேறு தாவர இனங்களும், பூச்சியினங்களும் வளர வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.இவ்வாறுf, அவர் கூறினார்

.


- நமது நிருபர் குழு -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X