சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னரில் கடத்தப்பட்ட 4,500 கிலோ 'குட்கா' சிக்கியது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மாதவரம்-சென்னை கொண்டித்தோப்பு, ரங்கா பிள்ளை கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் ஜெயின், 44. இவர், மாதவரம், 200 அடி சாலையில், நுாறு குடோன் பகுதியில், 'மகாலட்சுமி லாஜிஸ்டிக்' என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார்.இதற்காக, தனக்கு சொந்தமான, 21 கன்டெய்னர் லாரிகள் மற்றும் வாடகை குடோன் வைத்து, தொழில் செய்து வருகிறார்.இந்த நிலையில், டில்லியைச் சேர்ந்த

மாதவரம்-சென்னை கொண்டித்தோப்பு, ரங்கா பிள்ளை கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் ஜெயின், 44. இவர், மாதவரம், 200 அடி சாலையில், நுாறு குடோன் பகுதியில், 'மகாலட்சுமி லாஜிஸ்டிக்' என்ற சரக்கு போக்குவரத்து நிறுவனம் நடத்தி வருகிறார்.இதற்காக, தனக்கு சொந்தமான, 21 கன்டெய்னர் லாரிகள் மற்றும் வாடகை குடோன் வைத்து, தொழில் செய்து வருகிறார்.இந்த நிலையில், டில்லியைச் சேர்ந்த ராம்சிங் என்பவருக்கும், சந்திர பிரகாஷ் ஜெயினுக்கும் லாரி வாடகை பாக்கி தொடர்பான பிரச்னை ஏற்பட்டது.ஏற்கனவே, கடந்த ஜூலை 30ம் தேதி, சந்திர பிரகாஷ் ஜெயினின் லாரியில், ராம்சிங் அனுப்பிய சரக்கு, நாக்பூர் போலீசிடம் சிக்கியது. அதில், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருளான 'குட்கா' பொருட்கள் இருந்தன.இந்நிலையில், ராம்சிங் மூலம், கடந்த 14ம் தேதி, பெங்களூருக்கு சரக்கு ஏற்றி வந்த மற்றொரு லாரியை, சந்திர பிரகாஷ் ஜெயின் அங்கு அனுப்பாமல், மாதவரம் குடோனில் நிறுத்தி வைத்தார்.மேலும் அதில் இருக்கும் சரக்கு குறித்து சந்தேகம் எழுந்ததால், நேற்று முன்தினம் இரவு, மாதவரம் போலீசில் சந்திர பிரகாஷ் ஜெயின் புகார் அளித்தார்.இதையடுத்து, நேற்று காலை போலீசார் முன்னிலையில் கன்டெய்னர் திறக்கப்பட்டது. அதில், 50 மூட்டைகளில், 4,500 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுனரான அலாவுதீன், 30, மற்றும் சந்திர பிரகாஷ் ஜெயினிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X