சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி அடித்து கொலை கணவருக்கு போலீஸ் 'காப்பு'

Added : ஆக 20, 2021
Share
Advertisement
அம்பத்துார்-குடும்ப பிரச்னையால், மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைதானார்.அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு, ஜே.பி.நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் முத்து, 40. இதே பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி, 34. இவர்களுக்கு, 12 வயது மகள், 10 வயது மகன் உள்ளனர்.முத்து, தன் பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், வியாபாரம் தொடர்பாக சிரித்துப் பேசுவார். பெண்களிடமும் சகஜமாக

அம்பத்துார்-குடும்ப பிரச்னையால், மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைதானார்.அம்பத்துார் அடுத்த சூரப்பட்டு, ஜே.பி.நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் முத்து, 40. இதே பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். இவரது மனைவி விஜயலட்சுமி, 34. இவர்களுக்கு, 12 வயது மகள், 10 வயது மகன் உள்ளனர்.முத்து, தன் பேக்கரிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம், வியாபாரம் தொடர்பாக சிரித்துப் பேசுவார். பெண்களிடமும் சகஜமாக பேசி வந்துள்ளார். இதனால், கணவர் மீது விஜயலட்சுமி சந்தேகம்அடைந்துள்ளார்.இதனால், அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 14ம் தேதி இரவு, வீட்டிற்குச் சென்ற முத்துவிடம், மேற்கண்ட பிரச்னை குறித்து, விஜயலட்சுமி வாக்குவாதம் செய்திருக்கிறார்.ஆத்திரமடைந்த முத்து, மனைவியை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். இதில், விஜயலட்சுமி மயங்கி விழுந்துள்ளார்.மறுநாள் காலையிலும், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, விஜயலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டதால், உறவினர்கள் இவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து, அம்பத்துார் போலீசார் முத்துவிடம் விசாரித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, விஜயலட்சுமி உயிரிழந்தார். இதையடுத்து, நேற்று மாலை முத்துவை கைது செய்து, மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X