சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பஸ் பயணியிடம் திருடியவர் கைதுசிந்தாதிரிப்பேட்டை: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 38. நேற்று முன்தினம் அண்ணாசாலை வழியாக 'தடம் எண்: 11ஜி' பஸ்சில் பயணித்தார். அப்போது அவரது மொபைல் போனை மர்மநபர் திருடிச் சென்றார். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்து, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 21, என்பவரை நேற்று கைது செய்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.மயான

பஸ் பயணியிடம் திருடியவர் கைதுசிந்தாதிரிப்பேட்டை: கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித், 38. நேற்று முன்தினம் அண்ணாசாலை வழியாக 'தடம் எண்: 11ஜி' பஸ்சில் பயணித்தார். அப்போது அவரது மொபைல் போனை மர்மநபர் திருடிச் சென்றார். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரித்து, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன், 21, என்பவரை நேற்று கைது செய்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.மயான பூமி ஊழியருக்கு கொலை மிரட்டல்மெரினா: மயிலாப்பூர், ஆறுமுகம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 40; மயான பூமி ஊழியர். நேற்று காலை மெரினா காவல் நிலையத்தில், மயிலாப்பூரைச் சேர்ந்த சிவக்குமார், 40, என்பவர் மது போதையில் வந்து, கொலை மிரட்டல் விடுத்ததாக, புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.மூதாட்டியிடம் நகை பறித்தவர் கைதுமாதவரம்: மாதவரம் பால்பண்ணை, பேங்க் காலனி ஜான்வாஸ் தெருவைச் சேர்ந்தவர் பாலாமணி, 72. இவர், 3ம் தேதி மாலை, வீட்டருகே நடைபயிற்சி சென்றபோது டூ - வீலரில் வந்த மர்மநபர்கள், 5 சவரன் செயினை பறித்து தப்பினர். மாதவரம் பால்பண்ணை போலீசார் விசாரித்து கீழ்கட்டளை ஆதிகேசவன், 19, என்பவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்து 7 சவரன் நகையை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X