கட்டுமான தொழிலாளி படுகொலை கஞ்சா போதை ஆசாமிகள் வெறி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளி படுகொலை கஞ்சா போதை ஆசாமிகள் 'வெறி'

Added : ஆக 20, 2021
Share
மீஞ்சூர்--மீஞ்சூரில், பெட்ரோல் திருடுவதை தட்டிக் கேட்ட கட்டுமான தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24; கட்டுமான தொழிலாளி. இவர், நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்தி, பணிக்கு செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் காலை வேலைக்கு

மீஞ்சூர்--மீஞ்சூரில், பெட்ரோல் திருடுவதை தட்டிக் கேட்ட கட்டுமான தொழிலாளி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 24; கட்டுமான தொழிலாளி. இவர், நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் பைக்கை நிறுத்தி, பணிக்கு செல்வது வழக்கம்.நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர், இரவு 9:30 மணிக்கு ரயிலில் நந்திம்பாக்கம் திரும்பினார்.அப்போது மர்ம நபர்கள் இருவர், அவரது பைக்கில் இருந்து பெட்ரோல் திருடுவதை கண்டார்.இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, கஞ்சா போதையில் இருந்த இருவரும் ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டு, கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பினர்.பலத்த காயம் அடைந்த ராஜேஷ், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு உயிரிழந்தார்.மீஞ்சூர் போலீசார் விசாரணையில், மீஞ்சூர் அடுத்த மவுத்தம்பேடைச் சேர்ந்த அப்பு என்கிற ராஜேஷ், 24, நந்தியம்பாக்கத்தைச் சேர்ந்த தமிழரசன், 24, ஆகியோர் ராஜேஷை கொலை செய்தது தெரியவந்தது. இவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X