சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரவுடிகள் 8 பேர் சுற்றிவளைப்பு ;வெடிகுண்டு, பட்டாக்கத்திகள் பறிமுதல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புழல்-புழல் அருகே, சட்டக்கல்லுாரி மாணவரை வெட்டியது உட்பட தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, ரவுடிகளாக வலம் வந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, நாட்டு வெடிகுண்டு மற்றும் பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.புழல், காந்தி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமணன், 27. ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லுாரியில், 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி

புழல்-புழல் அருகே, சட்டக்கல்லுாரி மாணவரை வெட்டியது உட்பட தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு, ரவுடிகளாக வலம் வந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, நாட்டு வெடிகுண்டு மற்றும் பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.புழல், காந்தி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமணன், 27. ஆந்திராவில் உள்ள சட்டக்கல்லுாரியில், 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 17ம் தேதி இரவு, காந்தி பிரதான சாலையில் வைத்து, மர்மநபர்கள் அவரை வெட்டி தப்பி சென்றனர். விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கோடு வெட்டியது தெரிய வந்தது.நேற்று முன்தினம் அதிகாலை, மாதவரத்தில் லாரியில் துாங்கிய வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள், 30, என்ற ஓட்டுனரை கத்திமுனையில் மிரட்டி, 9,500 ரூபாய், மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறித்து சென்றனர்.அதைத் தொடர்ந்து, செங்குன்றம், கிராண்ட்லைன் ஊராட்சியில் உள்ள, தனியார் பெட்ரோல் 'பங்க்' ஊழியர்களை கத்திமுனையில் மிரட்டி, 10 ஆயிரம் ரூபாயை பறித்தனர்.இந்த சம்பவங்கள் குறித்து, புழல், செங்குன்றம் மாதவரம் போலீசார் விசாரித்தனர்.இந்த நிலையில், செங்குன்றம், பம்மதுகுளத்தைச் சேர்ந்த கார்த்திக், 28, வியாசர்பாடி, கரிமேடைச் சேர்ந்த நாகராஜ், 21, புழல், காவாங்கரையைச் சேர்ந்த டில்லிபாபு, 22, விக்னேஷ், 21, உள்ளிட்ட எட்டு பேர் புழல் போலீசாரிடம் சிக்கினர்.தொடர் விசாரணையில், மேற்கண்ட சம்பவங்களில் இந்த கும்பல் ஈடுபட்டது உறுதியானது. மேலும், கார்த்திக், நாகராஜ், டில்லிபாபு ஆகியோர் பல்வேறு வழக்குகளில் சிக்கியவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், ஒரு ஆட்டோ, மூன்று இருசக்கர வாகனம், எட்டு பட்டாக்கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X