சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் போலீசிடம் செயின் பறிப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி--எம்.எல்.ஏ.,க்கள் விடுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் போலீசிடம், 7 சவரன் செயினை பறித்து தப்பிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சேத்துப்பட்டு, பிருந்தாவனம், 4வது தெருவைச் சேர்ந்தவர் கவிதா, 31. சேத்துப்பட்டு காவல் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,க்கள் விடுதி

திருவல்லிக்கேணி--எம்.எல்.ஏ.,க்கள் விடுதி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் போலீசிடம், 7 சவரன் செயினை பறித்து தப்பிய மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.சேத்துப்பட்டு, பிருந்தாவனம், 4வது தெருவைச் சேர்ந்தவர் கவிதா, 31. சேத்துப்பட்டு காவல் நிலையத்தில், முதல் நிலை காவலராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் இரவு இருசக்கர வாகனத்தில், திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.,க்கள் விடுதி அருகே சிவானந்தா சாலையில் சென்றார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், கவிதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் செயினை பறித்து தப்பினர்.திருவல்லிக்கேணி போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அது பழுதடைந்துள்ளது தெரிந்தது. இதனால், மர்ம நபர்களை பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதேபோல், பல்லவன் சாலையில், அரசு ஊழியர் சரஸ்வதி என்பவரிடம் 4 சவரன் செயின் பறிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X