சென்னையில் நுாதன முறையில் நகை பறிக்கும் கும்பல் அதிகரிப்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சென்னை-சென்னையில், தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில், மூதாட்டிகளை குறிவைத்து, 'அந்த பகுதியில் கலவரம் நடக்கிறது; நடந்து செல்ல வேண்டாம்; நகைகளை பத்திரமாக காகிதத்தில் மடித்து வைத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறி, நல்லவர்கள் போல் நடித்து, நுாதன முறையில் நகை, பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. தி.நகர், கண்ணம்மாப்பேட்டை, எஸ்.பி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுலோக்சனா, 72. இவர்,

சென்னை-சென்னையில், தி.நகர் உள்ளிட்ட பல இடங்களில், மூதாட்டிகளை குறிவைத்து, 'அந்த பகுதியில் கலவரம் நடக்கிறது; நடந்து செல்ல வேண்டாம்; நகைகளை பத்திரமாக காகிதத்தில் மடித்து வைத்துக்கொள்ளுங்கள்' எனக்கூறி, நல்லவர்கள் போல் நடித்து, நுாதன முறையில் நகை, பணம் பறிக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. தி.நகர், கண்ணம்மாப்பேட்டை, எஸ்.பி.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுலோக்சனா, 72. இவர், அதே பகுதியில் வீட்டு வேலை செய்து, உடல் நலம் பாதித்த கணவரை காப்பாற்றி வருகிறார்.அக்கறைஇவர் கடந்த 8ம் தேதி, மதியம் 12:15 மணியளவில், பாண்டிபஜார் முப்பாத்தம்மன் கோவிலுக்கு சென்று, வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, தனியார் பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவர், 'இந்த பகுதியில், மர்ம நபர்கள் இளம்பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்துச் சென்றுள்ளனர். இவ்வளவு நகையை அணிந்து செல்ல வேண்டாம்; உங்களுக்கும் அந்த நிலை ஏற்பட்டு விடும்' என, அக்கறையுடன் பேசுவது போல் நடித்தனர்.இவர்களின் பேச்சை நம்பிய சுலோக்சனா, 5 சவரன் தாலி, 2 சவரன் வளையல்களை கழற்றி, கைப்பையில் வைக்க முயன்றார். அப்போது, நாங்கள் மடித்து தருகிறோம் எனக் கூறி, 7 சவரன் நகையையும் பறித்துச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் குறித்து, பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். கோரிக்கைஇதே போல், மாநகரின் பல பகுதிகளிலும், நுாதன முறையில் நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுகுறித்து, கமிஷனர் சங்கர் ஜிவால் சிறப்பு கவனம் செலுத்தி நகைகளை மீட்டுத் தர வேண்டும் என, பாதிக்கப்பட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X