பொது செய்தி

தமிழ்நாடு

திறன் வளர்ப்பு பயிற்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சி

திருவள்ளூர்-திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.இத்திட்டத்தின் கீழ், திறன் வளர்ப்பு பயிற்சி, 2021- - 22-ம் ஆண்டிற்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் வழங்கப்பட உள்ளது.இப்பயிற்சி அளிக்க, உரிய நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது. பயிற்சி நிறுவனங்கள், தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.பிரதமர், கவுசல் கேந்திரா பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.விதிமுறைகளின், அரசு மூலம் வழங்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஊதியத்துடன் வேலைவாய்ப்பு, பயிற்சி முடித்தமைக்கான முன் அனுபவம் இருக்க வேண்டும்.தகுதியான திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள், தங்களது கருத்துருக்களை திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளாகத்தில் உள்ள ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில், வரும், 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X