பொது செய்தி

தமிழ்நாடு

'எழில்மிகு அரசு அலுவலகம்' கலெக்டர் அலுவலகத்தில் துவக்கம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 'எழில்மிகு அரசு அலுவலகம்' என்ற திட்டத்தினை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், நேற்று, துவக்கி வைத்து, குப்பையை அகற்றி, சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டார்.பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தலைமை செயலர் உத்தரவின்படி, இரண்டு வாரங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும், எழில்மிகு அரசு அலுவலகம் என்ற திட்டம் வாயிலாக

திருவள்ளூர்-திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், 'எழில்மிகு அரசு அலுவலகம்' என்ற திட்டத்தினை, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், நேற்று, துவக்கி வைத்து, குப்பையை அகற்றி, சுத்தம் செய்யும் பணியை பார்வையிட்டார்.பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:தலைமை செயலர் உத்தரவின்படி, இரண்டு வாரங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும், எழில்மிகு அரசு அலுவலகம் என்ற திட்டம் வாயிலாக துாய்மை பணி நடைபெற்று வருகிறது.அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் பணியாற்றுவதற்கு சுற்றுப்புறத்தினை துாய்மையாக வைத்துக் கொள்வதற்கும், பல்வேறு இடங்களிலிருந்து வரும் பொதுமக்கள், அரசு அலுவலர்களை சந்திக்கும் போது அலுவலகத்தை துாய்மையாக பராமரிப்பது அவசியமாக உள்ளது.இதற்காக அரசு அலுவலகங்களில் நீண்ட நாட்களாக உள்ள, உடைந்த நாற்காலி, மேஜை, ஆங்காங்கே தேங்கி இருக்கும் பழைய கோப்பு உள்ளிட்ட அனைத்தும் உரிய முறையில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.பழுதடைந்த மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி சுத்தப்படுத்த வேண்டியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர், வித்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X