பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து உயர்கிறது ஏரியின் நீர் மட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பள்ளிப்பட்டு--பள்ளிப்பட்டு அடுத்த, பாண்டரவேடு மற்றும் பொதட்டூர்பேட்டை ஏரிகள் மிகவும் விஸ்தீரனமானவை. இதில், பாண்டரவேடு ஏரி, ஆண்டு முழுதுமே தண்ணீர் நிரம்பி காணப்படும்.பாண்டரவேடு ஏரிக்கு சற்றும் குறையாத, பொதட்டூர்பேட்டை ஏரி, எளிதில் நிரம்பி விடுவது இல்லை. ஆனால், 2015 முதல், இந்த ஏரியின் நீர்வளம் மேம்பட்டுள்ளது என்றே கூறலாம். இதற்கு, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், வரத்து

பள்ளிப்பட்டு--பள்ளிப்பட்டு அடுத்த, பாண்டரவேடு மற்றும் பொதட்டூர்பேட்டை ஏரிகள் மிகவும் விஸ்தீரனமானவை. இதில், பாண்டரவேடு ஏரி, ஆண்டு முழுதுமே தண்ணீர் நிரம்பி காணப்படும்.பாண்டரவேடு ஏரிக்கு சற்றும் குறையாத, பொதட்டூர்பேட்டை ஏரி, எளிதில் நிரம்பி விடுவது இல்லை. ஆனால், 2015 முதல், இந்த ஏரியின் நீர்வளம் மேம்பட்டுள்ளது என்றே கூறலாம். இதற்கு, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், வரத்து கால்வாய்கள் சீரமைக்கப்பட்டதும் முக்கிய காரணம்.பொதட்டூர்பேட்டை கிராமத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள ஏரிக்கு, அத்திமாஞ்சேரிபேட்டை மற்றும் வாணிவிலாசபுரம் பகுதிகளில் இருந்து நீர்வரத்து உள்ளது.சமீப நாட்களாக பெய்துவரும் கனமழை யால், ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பொதட்டூர்பேட்டை ஏரி தற்போது, கடல் போல் காட்சி அளிக்கிறது.விரைவில், உபரி நீர் வெளியேற்றப்படும் நிலை ஏற்படலாம் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வானத்திற்கும், ஏரியின் நீர்பரப்பிற்கும் இடையே உள்ள மலைகள், சிறு கோடுகள் போல் தெரிகின்றன.அந்தளவிற்கு, ஏரியின் நீர்பரப்பு, பரந்து விரிந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X