போலீஸ் டைரி| Dinamalar

போலீஸ் டைரி

Added : ஆக 20, 2021
Share
'ஆன்-லைன்' மோசடி நபர் கைதுதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி கலா, 48. இவரிடம், சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த, பரத் என்பவர், கடந்த 10ம் தேதி, தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனியார் நிதி நிறுவனம் மூலம், 10 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாகவும், இதற்காக 19 ஆயிரத்து 195 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்,அவர் கூறியபடி, கலா, 'கூகுள்

'ஆன்-லைன்' மோசடி நபர் கைதுதிருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, ஈக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி மனைவி கலா, 48.

இவரிடம், சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த, பரத் என்பவர், கடந்த 10ம் தேதி, தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு தனியார் நிதி நிறுவனம் மூலம், 10 லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாகவும், இதற்காக 19 ஆயிரத்து 195 ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்,

அவர் கூறியபடி, கலா, 'கூகுள் பே'யில், அந்த தொகையை அனுப்பி உள்ளார். அதன் பின், அவரை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து, கலா அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசார், விசாரணை நடத்தி, பரத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.கடன் வாங்கியவருக்கு மிரட்டல்திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த, பட்டரைபெரும்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர், பாலன் மகன் குமார், 62. இவர், 2015ல் திருவள்ளூர், முகமது அலி தெருவைச் சேர்ந்த கர்ணன் என்பவரிடம், தன் வீட்டு மனையை அடகு வைத்து 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.

இதற்கு, மாதம்தோறும் வட்டி கட்டி வந்துள்ளார். இதற்கிடையே, 2016ல் குமார் 8 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக, பத்திரத்தில் கையெழுத்திட்டு, பணம் தராவிட்டால், மனையை எழுதிக் கொடுக்குமாறு மிரட்டியதாக, திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் விசாரிக்கின்றனர்.வாகனங்கள் பறிமுதல்பொதட்டூர்பேட்டை: சொரக்காய்பேட்டையை ஒட்டி, கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக, பொதட்டூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்றபோது, டாடா டிப்பர் லாரியில், 5 யூனிட் அளவிற்கு மணல் கடத்தி செல்வது தெரிந்தது. அந்த லாரியை மடக்கிய போலீசார், லாரி ஓட்டுனர் ராஜா, 48, என்பவரை கைது செய்தனர். மேலும், லாரி உரிமையாளரை தேடி வருகின்றனர். 5 யூனிட் மணலுடன், லாரி பறிமுதல் செய்யப்பட்டது.கும்மிடிப்பூண்டி: புதுகும்மிடிப்பூண்டி பகுதியில், சிப்காட் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது, கும்மிடிப்பூண்டி, ஈசா பெரிய ஏரியில் இருந்து, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை பறிமுதல் செய்தனர்.அதன் டிரைவரான புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தை சேர்ந்த தணிகாசலம், 40, என்பவரை, கைது செய்தனர். இளம்பெண் மாயம்ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அடுத்த, பலிஜி மதுராபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைபாபு மகள் திவ்யபாரதி, 20. நர்சிங் படித்துள்ளார். இவர், நேற்று முன்தினம், இரவு 8:00 மணியளவில், வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, துரைபாபு, ஆர்.கே.பேட்டை போலீசில், மகள் திவ்யபாரதியை கண்டுபிடித்து தரும்படி, புகார் அளித்துள்ளார்.சிறுமி தற்கொலைதிருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம், பழையனுார் ஊராட்சி, முத்தரையர் தெருவை சேர்ந்தவர் சுகுமார் மகள் சுசித்ரா 13; இரவில் தந்தை குடித்து விட்டு, அடிக்கடி சண்டை போடுவதால், மனமுடைந்தவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வாலிபருக்கு 'காப்பு' திருத்தணி: பள்ளிப்பட்டு அடுத்த, சிபி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி மகள் காஞ்சனா, 21. இவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் வினோத், 21, என்பவர், காதலித்து, திருமணம் செய்துக் கொள்வதாக பலமுறை தனிமையில் சந்தித்து உள்ளார்.

இதனால், கர்ப்பம் அடைந்த காஞ்சனாவுக்கு, கடந்த 11ம் தேதி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.இதையடுத்து, காஞ்சனா அவரது பெற்றோர் வினோத் வீட்டிற்கு சென்று திருமணம் செய்துக் கொள்ளுமாறு பலமுறை கேட்டுள்ளார்.இதற்கு வினோத், திருமணம் செய்துக் கொள்ள மாட்டேன், தொந்தரவு செய்தால், உன்னை கொன்று புதைத்து விடுவேன் என, காஞ்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து காஞ்சனா அளித்த புகாரையடுத்து, திருத்தணி அனைத்து காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து, வினோத்தை கைது செய்தனர்.மயங்கி விழுந்த முதியவர் பலிதிருத்தணி: சென்னை, சைதாப்பேட்டை, செட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் நடராஜன், 68. இவருக்கு, சில ஆண்டுகளுக்கு முன், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், நடராஜன், முருகன் கோவிலுக்கு செல்வதற்காக, சென்னை சென்ட்ரலில் இருந்து, மின்சார ரயில் மூலம் திருத்தணிக்கு வந்தார்.

பின், ம.பொ.சி.சாலை பழக்கடைகள் அருகே நடந்து சென்ற நடராஜன், திடீரென மயங்கி விழுந்தார். அவரை, அங்கிருந்தவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடராஜனை பரிசோதனை செய்த மருத்துவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை முயற்சிகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ், 52; ஆட்டோ ஓட்டுனர். தனியாரிடம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். தினமும் வட்டியாக 100 ரூபாய் தர வேண்டும். ஒரு மாதமாக அவரால் தர முடியவில்லை.

இதனால், நேற்று முன்தினம், கடன் கொடுத்த தரப்பினர் பணம் வசூல் செய்ய வந்துள்ளனர். அவர்கள் தகாத முறையில் பேசியுள்ளனர். இதனால் பால்ராஜ், பணம் வசூலிக்க வந்தோரிடையே தகராறு ஏற்பட்டது.இதையடுத்து வீட்டுக்கு வந்த பால்ராஜ், அறையில் துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தார், அவரை மீட்டு, செங்கல்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். காஞ்சிபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X