கழிவு நீர் கால்வாய் பணி நிறுத்தம் சப்தகிரி நகர் மக்கள் அவதி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருத்தணி-திருத்தணி நகராட்சியில், கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், சப்தகிரி நகர் மக்கள் அவதிப்படுகின்றனர்.திருத்தணி நகராட்சி, 20வது வார்டு, பாலாஜி நகர், சப்தகிரி நகர் ஆகிய பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.நகராட்சி நிர்வாகம் சார்பில் தார்ச் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.காலி

திருத்தணி-திருத்தணி நகராட்சியில், கழிவு நீர் கால்வாய் கட்டும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால், சப்தகிரி நகர் மக்கள் அவதிப்படுகின்றனர்.திருத்தணி நகராட்சி, 20வது வார்டு, பாலாஜி நகர், சப்தகிரி நகர் ஆகிய பகுதிகளில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.நகராட்சி நிர்வாகம் சார்பில் தார்ச் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளன.காலி மனைகுறிப்பாக, சப்தகிரி நகர் முதல் தெருவில் மண் சாலை மட்டும் உருவாக்கி, கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிகள், ஆறு மாதங்களுக்கு முன், நகராட்சி நிர்வாகம் துவங்கியது.ஆனால், கால்வாய் பணி முழுமையாக முடிக்காமல், பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மற்றும் மழை நீர், கால்வாயில் இருந்து, குடியிருப்பில் காலியாக உள்ள மனையில் குளம்போல் தேங்கி நிற்கிறது.இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், அங்கு அதிகளவில் பன்றிகள் வருவதால், நோய் பரவும் அபாயம் உள்ளது.எனவே, பாதியில் நிறுத்தப்பட்ட கழிவு நீர் கால்வாய் கட்டி முடிக்க வேண்டும் என, சப்தகிரி நகர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது நகராட்சியில் போதிய நிதி இல்லாததால், புதிய வளர்ச்சி பணிகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. 'நிதியுதவி வந்தவுடன் நிறுத்தப்பட்ட சப்தகிரி நகர் கழிவு நீர் கால்வாய் பணிகள் முழுமையாக முடிக்கப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X