பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி புறவழிச்சாலையில் மரக்கன்று நடும் பணி தீவிரம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருத்தணி-திருத்தணியில், 36 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை ஓரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.திருத்தணி நகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு, கடந்த ஆட்சியில், 36 கோடி ரூபாய் மதிப்பில், பட்டாபிராமபுரம் ஊராட்சியில் இருந்து, அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு, 3.2 கி.மீட்டர் துாரம்

திருத்தணி-திருத்தணியில், 36 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை ஓரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணியில், நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டுள்ளனர்.திருத்தணி நகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு, கடந்த ஆட்சியில், 36 கோடி ரூபாய் மதிப்பில், பட்டாபிராமபுரம் ஊராட்சியில் இருந்து, அரக்கோணம் மாநில நெடுஞ்சாலைக்கு, 3.2 கி.மீட்டர் துாரம் புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.தற்போது, பணிகள் துரித வேகத்தில் நடந்து, 90 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. ரயில்வே மேம்பாலம்அமைக்கும் பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன.இப்பணிகள் முடிந்தால், வாகன ஓட்டிகள் பயன்பாட்டிற்கு விடப்படும்.இந்நிலையில், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், புறவழிச் சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் மரக்கன்று நட்டவுடன் அதை பாதுகாக்ககம்பி வேலியும் உடனடியாக நெடுஞ்சாலை துறைஊழியர்கள் அமைக்கும்பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.இதுதவிர, புறவழிச்சாலையில் தார்ச்சாலை அமைத்த இடத்தில் சாலையோரம் மண் கொட்டி சமன் செய்யும் பணிகளும் நடந்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X