பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் 'லஞ்சம் தவிர்... நெஞ்சம் நிமிர் ' விழிப்புணர்வு: பணியாளர்களுக்கு வழிகாட்டும் முதல்வர்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தேனி : 'நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன். எனது கடமையை செய்ய ஒருபோதும் லஞ்சம் வாங்க மாட்டேன்' என வெளிப்படையாக அறிவித்து கண்ணியத்துடன் கடமையாற்ற துடிக்கும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு ஊக்கம் அளித்து 'தவறு' செய்பவர்களுக்கு அறிவுரை கூறி 'லஞ்சம் தவிர்.. நெஞ்சம் நிமிர்' என புகார் பெட்டி வைத்து லஞ்சம் கொடுப்பதும், வாங்கும் குற்றம் என்பது குறித்து தேனி அரசு

தேனி : 'நான் இந்த தேசத்தை நேசிக்கிறேன். எனது கடமையை செய்ய ஒருபோதும் லஞ்சம் வாங்க மாட்டேன்' என வெளிப்படையாக அறிவித்து கண்ணியத்துடன் கடமையாற்ற துடிக்கும் டாக்டர்கள், பணியாளர்களுக்கு ஊக்கம் அளித்து 'தவறு' செய்பவர்களுக்கு அறிவுரை கூறி 'லஞ்சம் தவிர்.. நெஞ்சம் நிமிர்' என புகார் பெட்டி வைத்து லஞ்சம் கொடுப்பதும், வாங்கும் குற்றம் என்பது குறித்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் முதல்வர் பாலாஜிநாதன்.

இங்கு 21 துறைகள் இயங்குகின்றன. 350 நர்ஸ்கள், 410 டாக்டர்கள், தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் 350, தொழில்நுட்ப நிபுணர்கள், இதரப் பணியாளர்கள், பாரா மெடிக்கல் ஊழியர்கள் என 322 பேர் என ஆக மொத்தம் 1432 பேர் பணிபுரிகின்றனர். தினமும் மருத்துவமனைக்கு வெளிநோயாளிகளாக சராசரியாக ஆயிரத்து 300 பேர் வந்து செல்கின்றனர்.முதல்வர் கூறியதாவது: லஞ்சம் தவிர்க்க எடுத்த நடவடிக்கைகள் என்ன... அரசு மருத்துவமனையை நோக்கி ஏழை, எளிய மக்கள் பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக வருகிறார்கள்.

அவர்களிடம் பணம் பெற்று சேவை செய்வது பணிக்கு ஒவ்வொருவரும் செய்யும் துரோகம். மருத்துவ சேவையின் மாண்பை அது குறைக்கும் செயல். அதனை தவிர்க்கவே 'லஞ்சம் தவிர்.. நெஞ்சம் நிமிர்' விழிப்புணர்வு புகார் பெட்டி வைக்கப்பட்டது. ஊழியர்கள், பொது மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்து கிறீர்கள்...

எங்கள் மருத்துவ மனையில் 21 துறைகள் இயங்கினாலும் மக்கள் அதிகளவில் கூடும் 5 இடங்களான மகப்பேறு மருத்துவ சிகிச்சைப் பிரிவு, அவசர விபத்து சிகிச்சைப்பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, பிரேத பரிசோதனை அறை உள்ள பகுதி, அறுவை சிகிச்சை அரங்குகள் உள்ள பகுதிகளில் லஞ்சம் தருவதும், பெறுவதும் குற்றம் என எழுதி வைத்திருப்பதுடன், கண்காணிக்கவும் குழு நியமித்துள்ளோம். லஞ்ச ஒழிப்புக் கண் காணிப்புக் குழு பணி என்ன...

அக்குழுவில் உள்ள மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் இளங்கோவன், காது மூக்கு தொண்டை பிரிவு நிபுணர் டாக்டர் ராம்சுந்தர், துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் கண்ணன் போஜராஜ், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ராதா, உதவி நிலைய மருத்துவ அலுவலர் ஈஸ்வரன், மணிமொழி, நர்சிங் கண்காணிப்பாளர் ஜெனிஜோசப் ஆகியோர் அடிக்கடி முக்கிய இடங்களில் மக்களிடம் புகார் வருகிறதா என கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நடவடிக்கைக்கு பயன் எப்படி... கடந்த மார்ச்சில் இந்த விழிப்புணர்வு திட்டத்தை துவங்கிய போது தினமும் 6 புகார்கள் சராசரியாக வந்தன. விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து அனைவரின் ஒத்துழைப்புடன் பலன் கிடைத்துள்ளது.

இதற்கு குழுவின் தீவிர கண்காணிப்பு முக்கியமாக இருந்தது. அதுதவிர பல இடங்களில் கேமராக்கள் அமைத்து கண்காணித்து வருவதால் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் மட்டுமே நடைமுறையில் உள்ளது. ஸ்கேன் மையங்களில் லஞ்சம் வழங்குவதை தவிர்க்க தீவிர கண்காணிப்பு உள்ளது. அது தொடர்பாகவும் சிகிச்சைக்காக அலுவலர்கள், டாக்டர்களை தெரியும் என மக்களை ஏமாற்றுவோர் குறித்து புகார்களை புகார் பெட்டியிலும், என்னுடைய 99446 79100 என்ற அலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம். விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X