சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய தலைவரை கண்டித்துகவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர், அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.இந்த ஒன்றிய தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சி உள்ளார். நேற்று காலை 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. 7, தி.மு.க., 3 என 10 கவுன்சிலர்களில் தலைவரை தவிர்த்து 8 பேர் கூட்டத்திற்கு வந்தனர். ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை.

உத்தமபாளையம் : உத்தமபாளையம் ஒன்றிய அலுவலகத்தில் தலைவர், அதிகாரிகளை கண்டித்து கவுன்சிலர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த ஒன்றிய தலைவராக அ.தி.மு.க.வை சேர்ந்த ஜான்சி உள்ளார். நேற்று காலை 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. 7, தி.மு.க., 3 என 10 கவுன்சிலர்களில் தலைவரை தவிர்த்து 8 பேர் கூட்டத்திற்கு வந்தனர். ஒருவர் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை. தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர்.

பகல் 12:00 மணியை கடந்தும் தலைவர் வரவில்லை. கூட்டமும் துவங்கவில்லை. ஆத்திரமடைந்த இருகட்சி கவுன்சிலர்கள் 8 பேர், ஒன்றிய தலைவர் அலுவலகத்திற்கு முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.துணைத்தலைவர் மூக்கம்மாளிடம் கேட்டதற்கு, 'கொரோனா காரணம் காட்டி 18 மாதங்களாக கூட்டம் நடத்தவில்லை.

ஆனால் டெண்டர் விடுவது உள்ளிட்ட பணிகள் கவுன்சிலர்களுக்கு தகவல் தரப்படாமல் நடக்கிறது. 12:00 மணியை தாண்டியும் கூட்டம் துவங்க தலைவர் வரவில்லை. அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதில் நடவடிக்கை எடுக்க கலெக்டரை சந்திக்க செல்கிறோம்,'' என்றார்.வட்டார வளர்ச்சி அலுவலர் அய்யப்பன் கூறுகையில், 'தலைவர் மருத்துவமனையில் இருப்பதாக, துணை தலைவரை வைத்து கூட்டத்தை நடத்த தொலைபேசியில் கூறினார். ஆனால் கவுன்சிலர்கள் ஏற்காமல் வெளியில் சென்றுவிட்டனர்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X