பொது செய்தி

தமிழ்நாடு

தேங்காய் கொள்முதல் விலை உயர்வு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி : பெரியகுளம் பகுதி யில் ஆவணி திருமணம் முகூர்த்த சீசனால் தேங்காய் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கீழவடகரை, லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம் உட்பட 20 கிராமங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு

தேவதானப்பட்டி : பெரியகுளம் பகுதி யில் ஆவணி திருமணம் முகூர்த்த சீசனால் தேங்காய் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரியகுளம் ஒன்றியம் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, கீழவடகரை, லட்சுமிபுரம், வடபுதுப்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம் உட்பட 20 கிராமங்களில் தென்னை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தாண்டு துவக்கத்தில் ஒரு தேங்காய் ரூ.13 முதல் ரூ.15க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

வெளிமார்க்கெட்டில் ரூ.20 முதல் ரூ.25க்கு விற்கப்பட்டது. ஆடியில் தேங்காய் விலை ரூ.8 முதல் ரூ.10க்கு குறைவாக கொள்முதலானது. விவசாயிகளுக்கு கட்டுபாடியாகவில்லை. தற்போது ஆவணியில் திருமணம் முகூர்த்தம் உட்பட சுபநிகழ்ச்சிகளால் தேங்காய் விலை மீண்டும் ஏறுமுகமானது. ரூ.13 முதல் ரூ.17 வரை தரம் வாரியாக வியாபாரிகள் கொள்முதல் செய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X