பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி ஊக்கத்தொகை மோசடி; விரிவான விசாரணைக்கு முடிவு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மூணாறு : கேரளா மூணாறில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத்தோட்டங்களில் தொழிலாளர்களாக பல தலைமுறைகளாக வேலை செய்து வரும் தமிழர்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகளில்

மூணாறு : கேரளா மூணாறில் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கியதில் நடந்த மோசடி தொடர்பாக விரிவான விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.

மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத்தோட்டங்களில் தொழிலாளர்களாக பல தலைமுறைகளாக வேலை செய்து வரும் தமிழர்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லுாரிகளில் படிக்கின்றனர்.அவர்களில் தொழிற்கல்வி படிக்கும் ஆதிதிராவிடர்மாணவர்களுக்குதேவிகுளம் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகம் மூலம் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது.அத்திட்டத்தில் 2018- -19, 2019-- 20 ல் போலி ஆவணங்கள் மூலம் 23 மாணவர்களின் பெயரில்ரூ.15 லட்சம் வரைமோசடி நடந்ததாகதெரியவந்தது.

அதிகாரிகள் பயனாளிகளிடம் நடத்திய விசாரணையில் பள்ளி படிப்பை முடிக்காதவர்கள் உட்பட பலரது பெயரில்மோசடி நடந்தது அம்பலமானது.அதில் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த மாஜி உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தொடர்புள்ளதாக தெரியவந்தது.ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி.,ரவிகுமார்நடத்திய சோதனையில் பல ஆண்டுகளாக மோசடி நடந்ததாக உறுதியானதால் விரிவானவிசாரணை நடத்த கேரளஅரசிடம் அனுமதி கோரியுள்ளனர்.---------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X