பொது செய்தி

தமிழ்நாடு

கேரளா செல்லும் பெரியகுளம் மாங்காய் விவசாயிகள் எதிர்பார்த்த விலை இல்லை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெரியகுளம் : கேரளா ஓணம்பண்டிகைக்கு தினமும் 10 டன் காசா மாங்காய் அனுப்பப்படுகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி விலை இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.பெரியகுளம் சுற்றுப்பகுதியில் 2 ஆயிரம் எக்டரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளையும் மல்கோவா, காளைபாடி, செந்துாரம், பங்கனபள்ளி, சப்போட்டா, காசா உட்பட 20 வகையான மா ரகங்களுக்கும் சுவை அதிகம் என்பதால் மார்க்கெட்டில்

பெரியகுளம் : கேரளா ஓணம்பண்டிகைக்கு தினமும் 10 டன் காசா மாங்காய் அனுப்பப்படுகிறது. ஆனால் எதிர்பார்த்தபடி விலை இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.

பெரியகுளம் சுற்றுப்பகுதியில் 2 ஆயிரம் எக்டரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு விளையும் மல்கோவா, காளைபாடி, செந்துாரம், பங்கனபள்ளி, சப்போட்டா, காசா உட்பட 20 வகையான மா ரகங்களுக்கும் சுவை அதிகம் என்பதால் மார்க்கெட்டில் கிராக்கி இருக்கும். கேரளா மற்றும் குஜராத், ஆந்திரா உட்பட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் பல பகுதிகளுக்கு மே மாதம் முதல் ஜூன் வரை விற்பனைக்கு தினமும் 80 முதல் 100 டன் மாங்காய் அனுப்பப்பட்டது.

இந்தாண்டு விளைச்சலும் குறைவு, விலையும் எதிர்பார்த்தபடி இல்லை. நாளை கேரள ஓணம் பண்டிகையையொட்டி பெரிய குளம் பகுதியிலிருந்து சில நாட்களாக தினமும் 10 டன் காசாமாங்காய் அனுப்பப்படுகிறது. ஒரு டன் ரூ.35 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.விவசாயி முத்துகருப்பன் கூறியதாவது: சீசன் நேரத்தில் எதிர்பார்த்தபடி மா விலை இல்லை. விவசாயிகளுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஓணம் பண்டிகை காலங்களில் மாங்காய் விலை அதிகரிக்கும். கடந்தாண்டு ஒரு டன் காசாமாங்காய் ரூ.70 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது ஓணத்தையொட்டி ரூ.35 ஆயிரம் மட்டும் விற்கப்படுவதால் கட்டுபடியாகவில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X