பொது செய்தி

தமிழ்நாடு

கொடூரில் சிட்கோ: கலெக்டர் ஆய்வு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மாமல்லபுரம்-செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் தொழிற்சாலை எதுவும் இல்லாத தால், அங்குள்ளோர் பணி வாய்ப்புக்காக, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, தாம்பரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட தொலைதுார தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.இதனால் தொழிலக வாய்ப்பற்ற பகுதிகளில், அரசு தொழிற்பேட்டை வளாகம் அமைக்க, அரசு முடிவெடுத்து, அதற்கான இடத்தை தேர்வு

மாமல்லபுரம்-செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சுற்று வட்டார பகுதிகளில் தொழிற்சாலை எதுவும் இல்லாத தால், அங்குள்ளோர் பணி வாய்ப்புக்காக, மறைமலை நகர், மகேந்திரா சிட்டி, தாம்பரம், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட தொலைதுார தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றனர்.இதனால் தொழிலக வாய்ப்பற்ற பகுதிகளில், அரசு தொழிற்பேட்டை வளாகம் அமைக்க, அரசு முடிவெடுத்து, அதற்கான இடத்தை தேர்வு செய்து வருகிறது.கூவத்துார் அடுத்த, கொடூர் பகுதியில், சிறுதொழில் வளர்ச்சி கழக - 'சிட்கோ' சார்பில் தொழில் வளாகம் அமைய உள்ளது. இதற்குரிய இடம் வழங்க வருவாய் துறையிடம், சிட்கோ நிறுவனம் வலியுறுத்தியது.இதையடுத்து வருவாய் துறையும், சீக்கினாங்குப்பம் கிழக்கு கடற்கரை சாலை பகுதி அருகில், புல எண்கள், 124/1 அரசு மேய்க்கால் புறம்போக்கு; 124/2, 112 அனாதீனம் என, மொத்தம், 100.55 ஏக்கர் நிலத்தை, சிட்கோ நிறுவனத்திற்கு வழங்க முடிவெடுத்துள்ளது.இந்த இடத்தை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், நேற்று முன்தினம் செய்யூர் தாசில்தார் வெங்கட்ரமணன், லத்துார் வட்டார வளர்ச்சி நிர்வாகத்தினருடன் சென்று, ஆய்வு செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X