தனியார் பஸ்கள் டிரிப் கட் மலைப்பயணிகள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ்கள் 'டிரிப் கட்' மலைப்பயணிகள் அவதி

Added : ஆக 20, 2021
Share
பண்ணைக்காடு : பண்ணைக்காடு, தாண்டிக்குடி மலைப்பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் டிரிப் கட் செய்வதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.பூலத்தூர் -டூ திண்டுக்கல், தாண்டிக்குடி மார்க்கமாக வத்தலக்குண்டிற்கு தனியார் பஸ்கள் ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் இயக்கப்படாத நிலை உள்ளது. பண்ணைக்காடு டூ மதுரை தனியார் பஸ் தரைப்பகுதியில் மட்டும் இயக்கப்பட்டு மலைப்பகுதியில் டிரிப் கட்

பண்ணைக்காடு : பண்ணைக்காடு, தாண்டிக்குடி மலைப்பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் டிரிப் கட் செய்வதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

பூலத்தூர் -டூ திண்டுக்கல், தாண்டிக்குடி மார்க்கமாக வத்தலக்குண்டிற்கு தனியார் பஸ்கள் ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் இயக்கப்படாத நிலை உள்ளது. பண்ணைக்காடு டூ மதுரை தனியார் பஸ் தரைப்பகுதியில் மட்டும் இயக்கப்பட்டு மலைப்பகுதியில் டிரிப் கட் செய்து விடுகின்றனர்.

பயணிகளின் வருகை குறைவு என்று கூறி தனியார் பஸ்கள் இதை செய்கின்றனர். இதனால் தொலைத் தூர மலைக்கிராமங்களில் உள்ளவர்களுக்கு போக்குவரத்து வசதி தடைப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் மலைப்பகுதியில் தனியார் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X