கழிவு நீர் தேங்குவதால் மோச்சேரியில் சீர்கேடு 

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுராந்தகம்--மதுராந்தகம் நகராட்சி மோச்சேரியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேற அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கால்வாய், இரு ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை.இது குறித்து, மோச்சேரி மக்கள் கூறியதாவது:எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், இதற்கு முன் விவசாய நிலங்கள் வழியாக

மதுராந்தகம்--மதுராந்தகம் நகராட்சி மோச்சேரியில், 2,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேற அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் கால்வாய், இரு ஆண்டுகளாக பராமரிக்கப்படவில்லை.இது குறித்து, மோச்சேரி மக்கள் கூறியதாவது:எங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர், இதற்கு முன் விவசாய நிலங்கள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.விவசாயிகளின் பயிர்கள் சேதமடைவதால், கழிவு நீர் சென்ற கால்வாயை அடைத்து விட்டனர். இதனால் கழிவு நீர் செல்ல முழுமையான கால்வாய் வசதி இல்லாததால், கழிவு நீர் தேங்கி நிற்கிறது.இதில் கொசு உற்பத்தி அதிகரித்து, குழந்தைகள் முதல் பெரியோர் வரை, இரவில் துாக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். கொசுக்கடியால் தொற்று நோய் ஏற்படும் நிலை உள்ளது.இதற்கு நிரந்தர தீர்வாக கழிவு நீர் முற்றிலும் வெளியேறும் வகையில், கால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X