பொது செய்தி

தமிழ்நாடு

சதுர்த்திக்கு சிலை வைக்க உற்பத்தியாளர்கள் கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
உத்திரமேரூர்-'விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த, அரசு அனுமதிக்க வேண்டும்' என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்கவில்லை.இதனால், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில்,

உத்திரமேரூர்-'விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த, அரசு அனுமதிக்க வேண்டும்' என, இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்ததால், பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதிக்கவில்லை.இதனால், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட இடங்களில், விநாயகர் சிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், தொழில் முடங்கி, வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.இந்நிலையில், நடப்பு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, செப்., 10ல் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டாவது பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்த, அரசு அனுமதிக்க வேண்டும் என, விநாயகர் சிலை உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேடபாளையம் கிராம விநாயகர் சிலை உற்பத்தியாளர் குமரேசன் கூறியதாவது:கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி, வட்டிக்கு கடன் வாங்கி, சிலை தயாரிப்புக்கான மூலப்பொருட்களை வாங்கி சிலைகள் செய்தேன்.ஆனால், பொது இடங்களில் சிலை அமைத்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்காததால், ஒரு சிலைகூட வியாபாரம் ஆகவில்லை. இதனால், கடனுக்கான வட்டியைகூட செலுத்த முடியவில்லை.அதேபோல், நடப்பு ஆண்டும் அரசு அனுமதி வழங்காததால், இதுவரை ஒரு சிலைக்குகூட 'ஆர்டர்' வரவில்லை.சிலை தயாரிப்பாளர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபாடு நடத்த, அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X