பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரை, வேடசந்துாரில் அமைகிறது 'அடர் குறுவனம்'

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வடமதுரை : வடமதுரை, வேடசந்துாரில் அடர் குறுவனம் அமைக்கும் திட்டத்தை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.ஜப்பானைச் சேர்ந்த அகிரா மியாவாக்கி 'குறுங்காடு' வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் மரங்கள் இயல்பான மரங்களை விட அதி வேகமாக வளரும். குறைந்து வரும் வனப்பரப்பை அதிகரிக்க அடர் குறுவனங்களை உருவாக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, வடமதுரை

வடமதுரை : வடமதுரை, வேடசந்துாரில் அடர் குறுவனம் அமைக்கும் திட்டத்தை கலெக்டர் விசாகன் துவக்கி வைத்தார்.

ஜப்பானைச் சேர்ந்த அகிரா மியாவாக்கி 'குறுங்காடு' வளர்ப்பு முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையில் மரங்கள் இயல்பான மரங்களை விட அதி வேகமாக வளரும். குறைந்து வரும் வனப்பரப்பை அதிகரிக்க அடர் குறுவனங்களை உருவாக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, வடமதுரை ஒன்றியத்தில் குளத்துார் சந்தனதேவர்நகர், சிங்காரகோட்டை அகிலாண்டபுரம், பாடியூர் புதுப்பட்டி, தென்னம்பட்டி தோணிகவுண்டன்புதுார், கொல்லப்பட்டி இந்திராநகர் ஆகிய 6 இடங்களில் அடர் குறுவனம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.

கலெக்டர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார். திட்ட இயக்குனர் தினேஷ்குமார், தாசில்தார் மணிமொழி, கமிஷனர்கள் குணவதி, ரவீந்திரன், ஊராட்சி தலைவர் சுகந்தி, துணைத்தலைவர் வளர்மதி, ஒன்றிய கவுன்சிலர் ஸ்ரீரங்கம்மாள், ஊராட்சி செயலர் மோகனதாஸ், திண்டிமாவனம் முதன்மை ஒருங்கிணைப்பாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் ராஜவேல் முருகன் பங்கேற்றனர்.அதே போல், வேடசந்துார் இ.சித்துார் ஊராட்சி மாலைக்குளத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய புகையிலை ஆராய்ச்சிநிலைய தலைவர் மணிவேல், வேளாண் உதவி இயக்குநர் சின்னச்சாமி, ஊராட்சி தலைவர் சுப்பிரமணி பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X