சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை வளைவில் கார் மோதி ஒருவர் பலி; மூவர் படுகாயம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்போரூர்--கரும்பாக்கம் சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 100 நாள் திட்ட பணியாளர்கள் மீது மோதியதில் ஒருவர் இறந்தார்; மூவர் படுகாயமடைந்தனர்.திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை கரும்பாக்கத்தில், 100 நாள் திட்ட வேலைக்காக, நேற்று காலை 9:00 மணிக்கு, சாலை ஓரம் பெண்கள் நடந்து சென்றனர்.அப்போது, செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் நோக்கி சென்ற 'மகேந்திரா கேயுவி'

திருப்போரூர்--கரும்பாக்கம் சாலை வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், 100 நாள் திட்ட பணியாளர்கள் மீது மோதியதில் ஒருவர் இறந்தார்; மூவர் படுகாயமடைந்தனர்.திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை கரும்பாக்கத்தில், 100 நாள் திட்ட வேலைக்காக, நேற்று காலை 9:00 மணிக்கு, சாலை ஓரம் பெண்கள் நடந்து சென்றனர்.அப்போது, செங்கல்பட்டிலிருந்து திருப்போரூர் நோக்கி சென்ற 'மகேந்திரா கேயுவி' கார், கரும்பாக்கம் வளைவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, வேலைக்கு சென்ற பெண்கள் மீது மோதியது.தாறுமாறாக ஓடிய கார், அருகேயிருந்த மெக்கானிக் கடையில் நிறுத்தப்பட்டிருந்த பழுதான இரண்டு இருசக்கர வாகனங்களை இழுத்துக்கொண்டு, மின்கம்பத்தின் மீது மோதியது.ஓட்டுனருக்கு வலைவீச்சுஇந்த விபத்தில், ராயல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் மனைவி புஷ்பா, 43, அதே இடத்திலேயே இறந்தார். மேலும், சவுமியா, மஞ்சுளா, அன்னாள் ஆகியோர் படுகாயமடைந்தனர்.உடனடியாக, '108' ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த மூவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருப்போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். தப்பியோடிய ஓட்டுனரை தேடுகின்றனர்.வேகத்தடை இல்லாததே காரணம்திருப்போரூர்- - செங்கல்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சமீபத்தில் புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கரும்பாக்கம் பஸ் நிறுத்த ஆபத்தான வளைவில் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. பணி முடிந்தும், நெடுஞ்சாலைத் துறை அங்கு வேகத்தடை அமைப்பதில் அலட்சியம் காட்டியதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வேகத்தடை அல்லது இரும்பு தடுப்பு அமைத்து, விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X